சாய் துர்கா தேஜ் | அம்மா அநாதை இல்லமும் – ஆந்திர வெள்ளப் பெருக்கும்
சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ், அவரது மாமா ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் போலவே சமூக அக்கறை மிக்க உதவிகள் வழங்குவதில் பெயர் பெற்றவர். இரு தெலுங்கு மாநிலங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நிவாரணப் பணிகளில் சாய் துர்கா தேஜ் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகிறார்.ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தலா ரூ. 10 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சத்தை அவர் வழங்கியுள்ளார். கூடுதலாக, அவர் மேலும் ஐந்து லட்சங்களை அம்மா அறக்கட்டளை மற்றும் பிற அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். அவர் உறுதியளித்த தொகையை நன்கொடையாக வழங்க விஜயவாடாவிற்கு நேரில் வருகை தந்திருந்தார்.விஜயவாடாவைப் பாதித்த சமீபத்திய வெள்ளத்தைத் தொடர்ந்து, சாய் துர்கா தேஜ் தனது துர்கா அம்மா இல்லத்தைப் பார்வையிட்டு, முதியோர்களின் நலனை விசாரித்தார். அவர் அம்மா அறக்கட்டளைக்கு, இரண்டு லட...