Shadow

Tag: சிம்ஹா

ஹீரோவாகும் சிம்ஹா!

ஹீரோவாகும் சிம்ஹா!

சினிமா, திரைத் துளி
இயக்குநரும் தயாரிப்பாளருமான மனோபாலா அவர்களின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் மற்றும் R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் பாம்பு சட்டை. “சதுரங்க வேட்டை” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மனோபாலா தொடுக்கும் புதிய வேட்டையான ‘பாம்பு சட்டை’ படத்தை புதுமுக இயக்குனர் ஆடம் தாசன் இயக்குகிறார், இவர் இயக்குநர் சங்கரின் இணை இயக்குநர் ஆவார். பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து வந்த பாபி சிம்ஹா இப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இவருக்கு கச்சிதமாகப் பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது இந்த கதாபாத்திரம். ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்ற அஸீஸ் அசோக் இசையமைப்பளாராக அறிமுகமாகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பதிவு நாளை முதல் ஆரம்பமாகிறது. திட்டமிட்டப்படி படமெடுத்து வெளியிடும் மனோபாலா இப்படத்தை கோடை வ...
ஜிகர்தண்டா விமர்சனம்

ஜிகர்தண்டா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பொழுதுபோக்கு என்றால் அது சினிமா மட்டும்தான் என்றாகிவிட்டது. சாவு வீட்டிற்கு ஒரு நடிகன் வந்தால், இறந்தவர் பற்றிய நினைவலைகள் தடைபட்டு நாயகனைப் பற்றிய பிம்பம் அவ்விடத்தில் மேலோங்குகிறது. துக்கத்துடன் நடிகர் ஜீவா ஏதேனும் சாவு வீட்டிற்குச் சென்றால், “மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்!” எனச் சொல்லச் சொல்லி அவரை தர்மசங்கடத்திற்கு ஆட்படுத்துவார்களாம். இடம் பொருள் ஏவல் என மூன்றிற்கும் கட்டுப்படாமல், ஒரு கனவுநிலையையோ எக்ஸைட்மென்ட்டையோ உருவாக்கும் சர்வ வல்லமை பெற்றது சினிமா. தனது கனவினை அறுவடை செய்ய எவர் தோளிலும் பயணிக்கும் கார்த்திக்கிற்கும், தன் மீதுள்ள பயத்தை இலக்கற்று அறுவடை செய்யும் சேதுவுக்கும் இடையில் நிகழும் கதை. படத்தின் நீளம் 170 நிமிடங்கள் என்றதும் ஒருவித அயர்ச்சி மனதில் எழுகிறது. ஆனால் படம் பார்க்கும் பொழுது அத்தகைய சலிப்புகள் எழாமல் இருப்பதுதான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் வெற்றி. நே...
ஈவிரக்கமற்ற சிம்ஹா

ஈவிரக்கமற்ற சிம்ஹா

சினிமா, திரைச் செய்தி
‘பீட்சா’வைத் தொடர்ந்து தான் இயக்கும் இரண்டாவது படத்தைப் பற்றி, “இது நான் பீட்சாக்கு முன்பே எழுதின ஸ்க்ரிப்ட். பீட்சா தயாரிப்பாளர் C.V.குமார்கிட்ட சொன்னேன். என்னோட பட்ஜெட் ஒன்றரை கோடிதான். ஆனா இதுக்கு பட்ஜெட் அதிகமாகும். உங்க ரைட்டிங் ஸ்டைல் நல்லாயிருக்கு. என் பட்ஜெட்க்குள் எழுத முடியுமா பாருங்கன்னு சொன்னார். நான் விடாம அதுக்கு அப்புறம் நாலு ப்ரொட்யூசரைப் பார்த்து கதை சொன்னேன். ஃபர்ஸ்ட் டைம் டைரக்ட் பண்றீங்க.. பட்ஜெட் அதிகமாகயிருக்குன்னு சொல்லிட்டாங்க. சரின்னு இந்த ஸ்க்ரிப்ட்டை மூட்டை கட்டி வச்சுட்டு பீட்சா பண்ணேன். இப்ப கொஞ்சம் மாத்தி ஜிகர்தண்டான்னு வந்திருக்கு. எனக்கு கதை சொல்ல வராது. ஸ்க்ரிப்ட் கொடுத்து தயாரிப்பாளர் கதிரேசன்கிட்ட படிக்கச் சொன்னேன். பரவாயில்லை கதை சொல்லுங்கன்னு சொன்னார். நான் சொன்னேன். இல்ல.. ஸ்க்ரிப்ட் கொடுங்க என வாங்கிப் படிச்சுட்டு நல்லாயிருக்குன்னு சொன்னார்.படத்த...
சூது கவ்வும் விமர்சனம்

சூது கவ்வும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படம் தொடங்கிய சில நிமிடங்களில் இருந்து படம் முடியும் வரை விலா நோகச் சிரிக்க வைத்துள்ளனர் 'சூது கவ்வும்' குழுவினர்.   ஆட்களைக் கடத்தி, மிரட்டி (!?) பணம் சம்பாதிக்கும் நல்ல கடத்தல்காரர் தாஸ். ஊரை விட்டு சென்னை ஓடி வந்த ஒருவனும், வேலையை இழந்த அவனது இரண்டு நண்பன்களும் தாஸுடன் இணைந்து அமைச்சர் மகனைக் கடத்துகின்றனர். அதன் பின் தாஸ் குழுவினருக்கு என்ன நடந்தது என்பதுடன் படம் நிறைவுறுகிறது.   தாஸாக விஜய் சேதுபதி. 2012 இல் இறுதியில், விஜய் சேதுபதி நடிப்பில் வந்து அசத்திய நடுவில் கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை விட பல மடங்கு அசத்துகிறது இப்படம். இரண்டிலுமே நாயகனாக நடித்திருந்தாலும், விஜய் சேதுபதி பின் வரிசையில் நிற்கும் நபர் போலவே வருவார். எனினும் படத்தை சுமப்பவர் அவரே! கதை கேட்டு படங்களை தேர்ந்தெடுப்பதால் தான் பெரிய ஹீரோக்கள் என அறியப்படுபவர்கள் மண்ணை கவ்வும் பொழுது, விஜய் சேதுபதி திரையர...