Shadow

Tag: சி.வி.குமார்

இன்று நேற்று நாளை 2′ விற்காக இணையும் சி.வி.குமார் மற்றும் இயக்குநர் ரவிக்குமார்

இன்று நேற்று நாளை 2′ விற்காக இணையும் சி.வி.குமார் மற்றும் இயக்குநர் ரவிக்குமார்

சினிமா, திரைச் செய்தி
திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் பேனரில் சி வி குமார் தயாரிப்பில் 2015ம் ஆண்டு வெளிவந்த 'இன்று நேற்று நாளை' அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற திரைப்படம் ஆகும். இதன் இயக்குநர் ரவிக்குமார், சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'அயலான்' வெற்றி படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ஒன்பது வருடங்களுக்குப் பிறகு 'இன்று நேற்று நாளை' இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு தற்போது  வெளியிடப்பட்டுள்ளது. தங்கம் சினிமாஸ் எஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி வி குமார் இணைந்து தயாரிக்கும் இந்தத் திரைப்படத்திற்கு 'இன்று நேற்று நாளை 2' என்று பெயரிடப்பட்டுள்ளது. ரவிக்குமார் எழுத்தில் உருவாகும் இந்தப் புத்தம் புதிய, சுவாரசிய காலப்பயணத் திரைப்படத்தை பரத் மோகன் இயக்குகிறார். சி வி குமாரிடம் 'மாயவன்' திரைப்படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய இவர், 'இக்ல...
வாய்தா – வர்ணத்தையும் வர்க்கத்தையும் பேசும் பொழுதுபோக்கு சமூகப்படம்

வாய்தா – வர்ணத்தையும் வர்க்கத்தையும் பேசும் பொழுதுபோக்கு சமூகப்படம்

சினிமா, திரைச் செய்தி
புதுமுகங்கள் நடிப்பில் தயாரான 'வாய்தா' படத்தின் ஆடியோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான சி. மகேந்திரன் வெளியிட்டார். வராஹ ஸ்வாமி ஃபிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. வினோத்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் 'வாய்தா'. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் ஓம் பிலிம்ஸ் வெளியிடுகிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான சி. மகேந்திரன் அவர்களின் புதல்வன் புகழ் மகேந்திரன் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை பவுலின் ஜெசிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் பேராசிரியர் மு. ராமசாமி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஆர்.ஜே. சேது முருகவேல் அங்காரகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சி. லோகேஸ்வரன் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீடு, ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று ...
மாயவன் விமர்சனம்

மாயவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொலை செய்பவன் இறந்து விடுகிறான். ஆனாலும், ஒரே மாதிரியான கொலைகள், கொலையாளி இறந்த பின்னும் தொடர்ந்து நடக்கின்றன. யார் இக்கொலைகளைச் செய்வது, எப்படிச் செய்யப்படுகிறது என்பது தான் மாயவன் படத்தின் கதை. மாயவன் – யார் கண்ணுக்கும் தெரிவதில்லை; அவனுக்கு இறப்பும் நேருவதில்லை. உடல்களை மட்டும் மாயவன் மாற்றிக் கொண்டே இருக்கிறான். ஆனால், இது கூடு விட்டு கூடு பாயும் கதையில்லை. தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கும் முதல் படமிது. நேரத்தை வளர்க்காமல் முதல் ஃப்ரேமிலேயே கதையைத் தொடங்கி அசத்தி விடுகிறார். அதுவும் படம் தொடங்கிய ஓரிரு நிமிடங்களிலேயே, ஒரு கொலைச் சம்பவத்தைப் போலீஸ் அதிகாரி ஒருவர் பார்க்க நேரிடுகிறது எனச் சுவாரசியமான ஒரு காட்சியினை வைத்து, பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார். படத்தொகுப்பாளர் லியோ ஜான் பாலும், இசையமைப்பாளர் ஜிப்ரானும், அந்த விறுவிறுப்பைக் கடைசி வரை தக்க வைக்க உதவியுள்ள...