Shadow

Tag: சுந்தர் சி.பாபு

கா – The Forest விமர்சனம்

கா – The Forest விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கா என்றால் காடு அல்லது கானகம் என்பதாகப் பொருளென உருவகப்படுத்தியுள்ளனர். ஆனால், 'கா' என்றால் காத்தல் என்று பொருள் கொள்ளலாமே அன்றி காடு எனக் கொள்ளலாகாது. ஆதியும் காடே, அந்தமும் காடே என்ற பாடல் வரிகளுடன் அடர்ந்த காட்டின் அட்டகாசமான விஷுவல்ஸுடன் படம் தொடங்குகிறது. கடுகுபாறை வனக்காவல் நிலையத்தின் அருகே முகாமிட்டுள்ளார் காட்டுயிர் ஒளிப்படக்கலைஞரான வெண்பா சுப்பையா. மதி என்ற பயந்த சுபாவிக்கு அவரது தந்தையின் வேலை கிடைத்து, கடுகுபாறை வனக்காவல் நிலையத்தில் பணியில் சேருகிறார். அரசியல் பேசி வில்லங்கத்தை உண்டாக்கும் ஓர் இளம்பெண்ணைக் கொலை செய்ய, அம்மலை வனப்பகுதிக்கு வருகிறார் விக்டர் மகாதேவன். இந்த மூன்று கதைகளும் ஒரு புள்ளியில் இணைகிறது. மதி பாறையிடுக்கில் கீழே சகதியில் விழுந்து, மேலே வெளிச்சத்தைப் பார்ப்பது மஞ்ஞுமள் பாய்ஸில் வரும் காட்சி போலவே உள்ளது. விழுந்து கிடக்கும் இடத்தில் இருந்து மேலே வர இயலாம...
எல்லாம் முருகன் செயல் – சுந்தர் சி.பாபு

எல்லாம் முருகன் செயல் – சுந்தர் சி.பாபு

சினிமா, திரைத் துளி
இயக்குநர் விஜயபாஸ்கர் சொன்ன கதை தயாரிப்பாளர் கார்த்திகேயனுக்குப் பிடித்து விடுகிறது. இரண்டு வருடங்களாக படமெதுவும் ஒத்துக் கொள்ளாத சுந்தர் சி. பாபுவிடம் கேட்காமலேயே, படத்தின் இசையமைப்பாளர் அவர் தானென இயக்குநர் பெயர் போட்டுக் கொள்கிறார். மருத்துவமனையிலிருந்த தன் அம்மாவிடம், “நீங்க வீட்டுக்கு வந்ததும் நான் மீண்டும் இசையமைக்கிறேன்” எனச் சொல்லியுள்ளார் சுந்தர் சி.பாபு. ஆனால் அவரின் அம்மா தவறியதால், கொடுத்த வாக்கைக் காப்பாற்ற படங்கள் எதுவும் ஒத்துக் கொள்ளாமல் இருந்துள்ளார். அச்சமயத்தில் தான், ‘அட்டி’ படத்துக்கு இசையமைக்குமாறு அணுகியுள்ளனர். தனது அம்மா தனக்கு மகளாகப் பிறந்துள்ளாரென சுந்தர் சி.பாபு மகிழ்ச்சியில் திளைத்திருந்த நேரமது. தயாரிப்பாளர் பெயரோ கார்த்திகேயன். ஆக, இது முருகனின் விருப்பமென படத்தை இசையமைக்க ஒத்துக் கொண்டுள்ளார் சுந்தர் சி.பாபு. அதற்கும் மேல், ‘அட்டி’ படத்தை அவரே வாங்கி தனத...