
தானா சேர்ந்த கூட்டம் விமர்சனம்
நீரஜ் பாண்டேயின் ஸ்பெஷல் 26-ஐத் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
தகுதி இருந்தும் லஞ்சம் கொடுக்காத காரணத்தால், நச்சினார்க்கினியனுக்கு சி.பி.ஐ.-இல் வேலை கிடைக்கவில்லை. அந்தக் கோபத்தை, ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு எப்படிப் போக்கிக் கொள்கிறார் என்பது தான் படத்தின் கதை.
அனிருதின் இசையில், தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில், பாடல்கள் அனைத்தும் கேட்கவும் பார்க்கவும் நன்றாக உள்ளன. குறிப்பாக, 'சொடுக்கு' பாடல் திரையரங்கைக் கொண்டாட்ட மனநிலைக்கு இட்டுச் செல்கிறது. ஆனால், கதையைத் தூக்கி நிறுத்துமளவுக்கு பின்னணி இசையில் போதுமான கவனம் செலுத்தியாதகத் தெரியவில்லை. சுவாரசியத்தைப் படம் முழுக்கத் தக்க வைக்க ஸ்ரீகர் பிரசாதின் படத்தொகுப்பு உதவியுள்ளது. ஆனாலும், காட்சிகளுக்கு இடையேயான 'ஜெர்க்'கும் அவசரமும், கோர்வையின்மைக்கு வழி வகுத்துள்ளது.
ஜான்சி ராணியாகவும், அழகு மீனாவாகவும் ...


