Shadow

Tag: திரு;.மாணிக்கம்

திரு. மாணிக்கம் | விஷால் சந்திரசேகரின் இசைக்கோர்வை

திரு. மாணிக்கம் | விஷால் சந்திரசேகரின் இசைக்கோர்வை

Others, காணொளிகள், சினிமா
நேர்மையே மனிதனின் மொழி என அனைவரும் உணரும் வகையில் சமுத்திரக்கனி, பாரதிராஜா, தம்பிராமையா, நாசர், கருணாகரன், ஶ்ரீமன், இளவரசு, சாம்ஸ், சந்துரு, அனன்யா, ரேஷ்மா, வடிவுக்கரசி ஆகியோர் நடிப்பில் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சுகுமார் ஒளிப்பதிவில், பரபரப்பான திரைப்படமாக உருவாகியுள்ள திரு.மாணிக்கம் திரைப்படத்திற்காக சீதாராமம் புகழ் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் இசையால் இதயங்களை உருக வைக்கும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களை வைத்து பிரம்மாண்டமாக ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரத்தில் உயிரோட்டமான பின்னணி இசையை இரவு பகல் பாராது உருவாக்கியுள்ளார்.விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரு.மாணிக்கம் படத்தை ஜி.பி. ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபால கிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் ஆகியோர் தயாரித்து உள்ளார்கள்....
மனிதனின் மனசாட்சியை கேள்வி கேட்கும் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் பின்னணி இசை பணிகள் துவங்கியது

மனிதனின் மனசாட்சியை கேள்வி கேட்கும் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் பின்னணி இசை பணிகள் துவங்கியது

சினிமா, திரைச் செய்தி
'சீதா ராமம்’ படத்தின் மூலம் மொத்த இளைஞர்களையும் தன் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் திரு.மாணிக்கம் திரைப்படத்தில் கவரவிருக்கிறார். சமுத்திரக்கனி. நாசர் போன்றோர்  முக்கிய வேடத்தில் நடிக்கும் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்வை பணிகள் ஹைதராபாத்தில் தொடங்கியது.பாடலாசிரியர்கள் சினேகன், ராஜூ முருகன், இளங்கோ கிருஷ்ணன் மற்றும் சொற்கோ ஆகியோர் இத்திரைப்படத்தில்  பாடல்களை எழுதியுள்ளனர்.‘ராஷ்மி ராக்கெட்’ என்ற இந்திப் படத்தின் கதை மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்த இயக்குனர் நந்தா பெரியசாமி இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி, போன்ற எழில் கொஞ்சும் இயற்கையான பல இடங்களை இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மைனா சுகுமார் அள்ளிக் கொண்டு வந்து படம் பிடித்திருக்கிறார்....