
தீபிகா படுகோன் இன் #AA22xA6
சன் பிக்சர்ஸ், ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன், இயக்குநர் அட்லீ இணைந்திருக்கும் #AA22xA6 படம் தொடர்பான புதிய தகவலைப் படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
நூறு கோடி, இருநூறு கோடி, ஐநூறு கோடி ரூபாய் எனத் தொடர்ந்து இந்திய அளவிலான வசூல் கிளப்பில் இணைந்த படங்களைத் தயாரித்து, வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறன் முதன் முறையாக பான்-வேர்ல்ட் திரைப்படமாக இந்தத் திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான இயக்குநராகப் பயணிக்கத் தொடங்கி, ' ஜவான்' படத்தின் மூலம் இந்திய சினிமாவில் தன் பிரத்தியேக முத்திரையைப் பதித்த இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகும் #AA22xA6 படத்தில், இந்திய சினிமாவின் உலகளாவிய வசூலில் புதிய சரித்திர சாதனையைப் படைத்த 'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் அதிரடி ஆக்சன் நாயகனாக நடிக்கிறார். ...