Shadow

Tag: நா.முத்துக்குமார்

ஒரு நல்லபாட்டு முடிந்தது – வைரமுத்து

ஒரு நல்லபாட்டு முடிந்தது – வைரமுத்து

சினிமா, திரைத் துளி
இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவு கொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப் போலவே என்னாலும் தாங்க இயலாதது. இது சாகும் வயதல்லை; சாதிக்கும் வயது. தன் பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர். அவர் பெறவேண்டிய மூன்றாவது விருதைக் காலம் களவாடிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் திரையுலகில் அதிகம் எழுதியவர்; அழகாகவும் எழுதியவர். “மழைமட்டுமா அழகு; வெயில் கூடத்தான் அழகு” என்று சொன்னவர், “வாழ்வு மட்டுமா அழகு; மரணம் கூடத்தான் அழகு” என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டார். தமிழ்க் கவிஞர் உலகம் வாழையடி வாழையாய்ச் செழிக்க வேண்டும் என்று பேராசை கொண்டவன் நான். இன்று இளங்கன்று ஒன்று தன் வேர்மண்ணோடு வீழ்ந்துவிட்டதே என்று விம்மி நிற்கிறேன். ஒரு நல்ல பாட்டு முடிந்துவிட்டதே என்று வேதனைப்படுகிறேன். ‘உன் சொந்த ஊர் எது தம்பி?’ என்...
பனிவிழும் நிலவு விமர்சனம்

பனிவிழும் நிலவு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காதல், ஊடல், பின் இணைதல்தான் படத்தின் கதை. ‘ஆதியும் அந்தியும்’ படத்தின் இயக்குநர் கெளஷிக்கின் மற்றுமொரு படம். முதல் படத்திற்கும் இதற்கும்தான் எவ்வளவு வித்தியாசம்? சைக்காலஜிக்கல் த்ரில்லரிலிருந்து எந்த சீரியஸ்னசும் இல்லாத ஜாலியான கதைக்குத் தாவியுள்ளார் கெளசிக். ஜம்போ என்கிற ஜம்புலிங்கமாக வெண்ணிறாடை மூர்த்தி நடித்துள்ளார். நல்லவேளையாக இவரைக் கல்லூரிப் பேராசிரியராக நடிக்க வைக்காமல் போனார் இயக்குநர். ஆனால் தன்னைச் சுற்றியுள்ள ஆண் மம்முட்டிகளால் (மண்வெட்டி) தனக்கு ஏதேனும் சேதாரமாகிவிடுமோ என்ற திகிலுடனுள்ள கதாப்பாத்திரம். படத்தின் முதற்பாதியைத் தனது விபரீதக் கற்பனையால் ஓரளவு சுவாரசியப்படுத்துவது வெண்ணிறாடை மூர்த்தி என்றால், இரண்டாம் பாதியைக் கலகலப்பாக்குவது மீனா அக்காவாக வரும் கோவை சரளா. அவர் வந்த பிறகு படத்தின் வேகம் கூடுகிறது. அவரது கண்ணுக்கு மட்டும் தெரியும் அவரது கனவரது பெயர் கமல் என்கி...