சிவகவி (1943)
(முக்கிய நடிகர்கள் : எம்.கே.தியாகராஜ பாகவதர்; எஸ்.ஜெயலட்சுமி; என்.எஸ்.கிருஷ்ணன்; டி.ஏ.மதுரம்; டி.ஆர்.ராஜகுமாரி; டி.பாலசுப்ரமணியம்; செருகளத்தூர் சாமா)பொய்யாமொழிப் புலவரைத் தான் ‘சிவகவி’ என்பார்கள். நாற்பத்து மூன்றில் வெளிவந்த ‘சிவகவி’ படத்தை, 1948 இல் ஒரு சிவராத்திரி இரவில், சிவராத்திரி கொண்டாடிய சில சிறுவர்களுடன் என்னையும் சேர்த்து படம் பார்ப்பதற்கு தியேட்டர் ஒன்றிற்கு அழைத்துச் சென்றார் எங்கள் தெருவில் வசித்த பெரியவர் ஒருவர். வெகு சுவாரஸ்யமாகப் படம் பார்த்த நினைவு.
பாடல்கள் பற்றிய விசேஷ அறிவோ, புரிதலோ ஏற்படாத காலத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் குழுவினரின் நகைச்சுவைக் காட்சிகளையே பெரிதும் விரும்பி, ரசித்துப் பார்க்க முடிந்தது.
என்றாலும், மிகவும் இனிமையான பாடல்கள் தான் இப்படத்தில் சிறப்பாகச் சொல்லப்பட வேண்டிய அம்சம். சிறுவயதில் மனதில் பதியும் பல சம்பவங்கள் எளிதில் நம்மை விட்டுப் போய்விடுவதில...