1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்
1729 என்பது ஆயிஷா நடராஜனின் புது நாவல். இந்த எண்ணைப் பற்றிய கதை மிகப் பிரபலமானது. நோய்வாய்ப்பட்டிருந்த கணித மேதை ராமானுஜரை அவரது நண்பர் ஹார்டி மருத்துவமனையில் பார்க்கப் போவார். அப்பொழுது, தான் வந்த டேக்ஸியின் நம்பரான 1729 இல் எந்தச் சுவாரசியுமும் இல்லை என அலுத்துக் கொள்வார் ஹார்டி. நோயுற்று, படுக்கையில் சோர்வுடன் படுத்திருந்த ராமானுஜர், சட்டென உற்சாகமாகி அந்த எண்ணின் சிறப்பைச் சொல்லுவார்.
என்பதே அதே!
ஹார்டி இதை வெளியுலகிற்கு விவரித்த பின், 1729 என்பது 'ராமானுஜன் - ஹார்டி எண்' என்ற சிறப்புப் பெயரைப் பெற்றது. இந்த நாவலுக்கு, இந்த எண்ணை விடப் பொருத்தமான தலைப்பு வேறென்ன இருக்க இயலும்!?
80 பக்க நாவல் தான் என்றாலும் படிக்க அவ்வளவு சிரமமாக உள்ளது. முன்னுரை எழுதியுள்ள ச.தமிழ்ச்செல்வன், "பல இடங்களில் கண்களில் நீர் திரையிட வாசித்தேன். சில இடங்களில் மேற்கொண்டு தொடர்ந்து வ...