Shadow

Tag: புறம்போக்கு

புறம்போக்கு என்கிற பொதுவுடமை விமர்சனம்

புறம்போக்கு என்கிற பொதுவுடமை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆறாண்டுகளுக்கு பிறகு வந்துள்ள எஸ்.பி.ஜனநாதனின் படம். அந்த எதிர்பார்ப்பைத் துளியும் ஏமாற்றாமல் அசத்தியுள்ளார். மக்கள் விடுதலைக்காகப் போராடி இறந்த அனைத்து தோழர்களுக்கும் இப்படத்தைச் சமர்ப்பிக்கிறார். பாலுச்சாமி எனும் கம்யூனிஸ்ட்க்கு, தேசத் துரோகக் குற்றத்துக்காக மூன்று தூக்கு தண்டனையை அறிவிக்கிறது இந்திய அரசு. தூக்கு தண்டனையை நிறைவேற்ற, சிறை அதிகாரியான ஏ.டி.ஜி.பி. மெக்காலே ஐ.பி.எஸ். வசம் ஒப்படைக்கப்படுகிறார் பாலுச்சாமி. தீர்ப்பின்படிபாலுச்சாமியைத் தூக்கிலிட, எமலிங்கம் எனும் ஹேங்மேனின் உதவி தேவைப்படுகிறது. எமலிங்கத்தின் உதவி கிடைத்ததா? பாலுச்சாமிக்கு தண்டனையை மெக்காலே நிறைவேற்றினாரா இல்லையா என்பதுதான் கதை. விறைப்பான காவல்துறை அதிகாரி மெக்காலேவாக ஷாம். மிகப் பொலிவாய், கம்பீரமாய் உள்ளார். சிறைக்குள் எல்லாம் சட்டப்படி நடக்க வேண்டுமென உறுதியாக இருக்கும் நேர்மையான காவல்துறை அதிகாரி. தூக்கு தண்...
புறம்போக்கு விஜய் சேதுபதி

புறம்போக்கு விஜய் சேதுபதி

சினிமா, திரைத் துளி
படத்தில் தனது கதாப்பாத்திரத்தைப்  பற்றி விஜய் சேதுபதி கூறும் பொழுது, “இப்படத்தில் நான் ‘எமலிங்கம்’ என்ற ரயில்வே தொழிலாளியாக வருகிறேன். நகரும் ரயில் வண்டியின் ஓசையும், ரயில்வே தொழிலாளியின் பரபரப்பும் என்னுள் அடங்கவே இல்லை. வேறு எந்த கதாநாயகனும் செய்யாத கதாப்பாத்திரம் என்று நான் தைரியமாக சொல்வேன். எமலிங்கம், ரசிகர்கள் அதிகம் கண்டிடாத ஒரு கதாப்பாத்திரமாக இருக்கும். எனது வாழ்நாளில் நான் நடித்த நல்ல கதாப்பாத்திரங்களில் ஒன்றாக இக்கதாப்பாத்திரம் நிலைத்து நிற்கும்.  இந்த கதாப்பாத்திரத்திற்காக பிரத்யேக பயிற்சி என்றும் ஏதும் எடுக்கவில்லை. உண்மையைச் சொல்லப் போனால் நடிப்பு என்பது அந்தக் கதாப்பாத்திரத்தின் குணாதிசயங்களையும், பின்புலத்தை முழுமையாக உணர்ந்தால் போதுமானது. எமலிங்கம் என்ற கதாப்பாத்திரத்தின் புதுமைக்காக சற்றே உடல் எடையைக் கூட்ட வேண்டியிருந்தது. மேலும் இக்கதாபாத்திரத்தை புரிந்துக் கொள்ளும் ...
வர்ஷனின் புறம்போக்கு இசை

வர்ஷனின் புறம்போக்கு இசை

சினிமா, திரைத் துளி
“படத்தின் தலைப்பே அனைவரின் கவனத்தை ஈர்த்து அனைவரது எதிர்பார்ப்பையும் தூண்டியுது. அந்த எதிர்பார்ப்புக்கு ஈடேற்றும் வகையில் இசையமைப்பது எனக்குப் பெரும் சவாலாக அமைந்தது. எனினும் ஒரு புதுமுகத்திற்கு.. தேசிய விருது பெற்ற இயக்குனரின் திரைப்படத்திற்கோ, UTV போன்ற பெரிய நிறுவனத்தின் படத்திலோ வாய்ப்புக் கிடைப்பது அபூர்வம். ஜனநாதன் சார் இப்படம் முழுவதும் என்னை வழி நடத்தி என்னை இசையமைப்பாளராக உருவாக்கியுள்ளார். லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து பின் இந்தியப் பாரம்பரிய இசையை சென்னை இசைக் கல்லூரியில் பயின்றேன். என்னுடைய சில பாடல்கள் ஜனநாதன் சார் அவர்களுக்குப் பிடித்திருந்தது. அதனால் எனக்கு ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தில் வாய்ப்பளித்தார். இப்படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும், ஜனநாதன் சாரின் திரைக்கதைக்கு உறுதுணையாய் இருக்கும் வண்ணம் அமைய வேண்டும் என்று நின...
காற்றும் ஒளியும் நிலவொளியும் சிகரங்களும்..

காற்றும் ஒளியும் நிலவொளியும் சிகரங்களும்..

சினிமா, திரைத் துளி
இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் நடிக்கும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ திரைப்படம் நிறைவுறும் தருவாயை எட்டியுள்ளது. UTV மோஷன் பிக்சர்ஸ் சித்தார்த் ராய் கபூர் தயாரிப்பில் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் முன்னர் ‘புறம்போக்கு’ என அழைக்கப்பட்டு வந்தது. தனது முதல் படமான ‘இயற்கை’ மூலம் தேசிய அங்கீகாரத்தை இயன்றதோடு, தனது அடுத்த படங்களான ‘ஈ’ மற்றும் ‘பேராண்மை’ ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் நம் ரசனைகளை ஆக்கிரமிக்க உள்ளார்.  ஒளிப்பதிவாளர் NK ஏகாம்பரம் கண்கவர் ஒளிப்பதிவில், செல்வ குமார் அவர்களின் வியத்தகு கலை இயக்கத்தில், கணேஷ் குமார் படத்தொகுப்பில், கேட்போரை மயக்கும் வண்ணமுள்ள அறிமுக இசையமைப்பாளர் வர்ஷனின் இசையமைப்பில், மிராக்கல் மைக்கல் அ...
“நான் முரட்டுப் பொண்ணு” – கார்த்திகா

“நான் முரட்டுப் பொண்ணு” – கார்த்திகா

சினிமா, திரைத் துளி
புறம்போக்கு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு குலு மணாலியில் முடித்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ராஜஸ்தானுக்கு கிளம்பும் உற்சாகத்தில் இருந்தார் கார்த்திகா. "குலுமனாலியில் நடந்த படப்பிடிப்பு மிகவும் சந்தோஷமாகவும், மறக்க முடியாததாக இருந்தது. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பிரசித்தி பெற்ற வீடியோகேம் கதாபாத்திரமான லாரா க்ராஃப்டை போல முரட்டுத்தனமான ஆக்‌ஷன் ஹீரோயின் பாத்திரம். இது எனக்கு புதிய அனுபவம், மேலும் இந்தப் படத்தில் நான் ஆடியிருக்கும் "டேப்"டான்ஸ் பெரிய அளவில் பேசப்படும்" என்றார். "என் மேல் நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்ப்பளித்த இயக்குநர் ஜனநாதனுக்கு என் உளமார்ந்த நன்றிகள். அவருடைய உலக அறிவு பிரம்மிப்பூட்டுகிறது. என் பார்வையில் அவர் ஒரு சரித்திர பேராசிரியராகவே தோன்றுகிறார். ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம்  ஆகியோருடன் நடிப்பதும், ஜனநாதனின் இயக்கத்தில் யூ டி.வி. motion pictures...
தொடங்கியது “புறம்போக்கு”

தொடங்கியது “புறம்போக்கு”

சினிமா, திரைத் துளி
குலு மனாலியில், எஸ்.பி.ஜனநாதனின் “புறம்போக்கு” படப்பிடிப்புத் தொடங்கியது. இயக்குநர் அமீர் ஃபர்ஸ்ட் கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார். இப்படத்தை யூ டி.வி. மோஷன் பிக்சர்சுடன் இணைந்து எஸ்.பி.ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸ் சேர்ந்து தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்யா, விஜய் சேதுபதியுடன் இணையும் ஷாம்

ஆர்யா, விஜய் சேதுபதியுடன் இணையும் ஷாம்

சினிமா, திரைத் துளி
ஆர்யா, விஜய் சேதுபதியுடன் புறம்போக்கு படத்தில் ஷாமும் இணைகிறார். குலு மணாலியில் ஜனவரி 14, 2014 முதல் படப்பிடிப்புத் தொடங்கவிருக்கிறது. பிக்கேனர், ஜெய்ப்பூர், பொக்ரான், ஜெய்சால்மர் என முதலில் வடஇந்திய நகரங்களில் படப்பிடிப்பு நடத்திவிட்டு ஹைதராபாத், சென்னைக்கு படப்பிடிப்பிற்காக வரவுள்ளனர்.“என் முதல்படம் இயற்கைக்குப் பிறகு ஷாமுடன் மீண்டும் இணைவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கேன். ஷாம் வேலையில் மிகுந்த ஈடுபாடுடன் இருப்பவர். ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் என 2014இன் முக்கிய படங்களில் ஒன்றாக இருக்கும். பல நடிகர்கள் ஒரே படத்தில் நடிக்கும் ட்ரெண்ட்டையும் தொடங்கி வைக்கிறோம். தலைப்பைப் போலவே படத்தின் கதையும் வித்தியாசமானது” என்கிறார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். “புறம்போக்கு பவர்ஃபுல்லான கரு கொண்ட கதை. மூன்று ஹீரோக்களுக்குமே முக்கியத்துவம் உள்ளது. ஷூட்டிங்கிற்காக ஆர்வமாகக் காத்திருக்கேன்” எ...