மாறா விமர்சனம்
மாறாவை முற்றிலும் வேறொரு படமாக எடுத்திருக்கலாம். சார்லியோட பலமே, அதில் பதில்களை விட கேள்விகள் தான் அதிகம். சார்லியோட நாடோடி வாழ்க்கைக்கான காரணம் அவனோட வாழ்க்கை தத்துவம் சார்ந்தது. அவன் ஏதோ ஒரு விஷயத்தைத் தேடி அலையவில்லை. அவனது தேடல் அகம் சார்ந்தது. அது தான் அந்தப் படத்தோட ஆன்மா. பார்வதி தேடிப் போவது அவனோட அபாரமான கலைக்காக இல்லை. அவனோட அந்த intriguing வாழ்க்கைமுறைக்காகத்தான். சார்லி அந்தப் படத்தில் ஒரு சூப்பர் ஹீரோ. ஏனெனில் சார்லியை மற்றவர்கள் கண் வழியாகப்தான் பாப்போம். ஜெயகாந்தனின் வரியான, 'விஸ்வரூபம் என்பது காட்டப்படுவதல்ல. காண்பது' என்வதற்கிணங்க, அங்கே சார்லியோட விஸ்வரூபம் ஒவ்வொருத்தரோட பார்வையில் இருந்து விஸ்தாரமாகும். அவன் அழுகை பார்வையாளர்களுக்குத் தெரியாது. ஏனெனில் நாம் அவனை தூரத்தில் இருந்தே தான் பார்க்கிறோம். அந்தப் படத்தின் அந்த அம்சத்தினை, அந்த ஆன்மாவைப் புரிந்து கொள்ளாமல், அல்...