மேஜர் கெளதமின் டைமிங் தலைப்பு
ப்ரேக் டான்ஸராக இருந்து நடிகராக மாறிய ‘மேஜர்’ கெளதம் தற்போது இயக்குநர் அவதாரம் பூண்டுள்ளார். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இந்நேரத்தில் ‘மேஜர்’ கெளதமும் அவரது குழுவும் மட்டும் மகிழ்ச்சியாக உள்ளனர். காலத்தின் அவசியம் உணர்ந்த வைக்கப்பட்டது போல், “கண்ல காச காட்டப்பா” என அவர்களின் படத் தலைப்பு அமைந்துவிட்டதே அதற்குக் காரணம்.
தலைப்பு மட்டுமன்று, படத்தின் கருவும் கறுப்புப் பணத்தை மையப்படுத்தியே! படத்தைப் பார்த்து விட்ட இயக்குநர் வெங்கட் பிரபு, “இரண்டரை மணி நேரம் ரசிகர்கள் கலகலப்பாக இருக்கப் போவது உறுதி” என்கிறார். S.G.சேகர் என்பவர் கதையை, இயக்குநர் கெளதம் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார்.
‘ஹெலிகேம் (Helicam)’ ஷாட்ஸ்கள் படத்தில் பிரமாதமாக உள்ளதென ஒளிப்பதிவாளர் அரவிந்தைப் பாராட்டினார் வெங்கட்பிரபு. படத்தின் நாயகனான அரவிந்த் ஆகாஷும், “மலேஷியாவில் ஷ...