Shadow

Tag: ரக்ஷனா

மருதம் விமர்சனம்

மருதம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மருதம் என்பது வயலையும், வயல் சார்ந்த இடங்களையும் குறிக்கும் ஒரு நிலப்பிரிவைக் குறிக்கும் திணையாகும். தமிழ் சினிமாவில் விவசாயிகளை வைத்து, ‘விவசாயின்னா யார் தெரியுமா? அவன் சேத்துல கால் வைக்கலனா சோத்துல நாம கை வைக்க முடியுமா?’ என்பது போலவே உணர்வுகளைப் பிழிந்து, அதை வைத்து கல்லா கட்டி விட்டன பல படங்கள். ஆனால் கன்டென்ட்டுக்காக விவசாயியைப் பற்றி எடுக்காமல், விவசாயிகளின் யதார்த்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் காட்டி, அத்தோடு அப்படி பல விவசாயிகள் சில மோசடி பேர்வழிகளிடம் சிக்கித் தங்கள் சொத்தை, வாழ்வை இழந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படமே மருதம் ஆகும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் தன் சொந்த நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து, மனைவி, மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் விதார்த். அரசுப் பள்ளியை விட தன் மகன் தனியார் பள்ளியில் படித்தால் தான் அவன் வாழ்க்கை பிரக...
மருதம் – SRM உதவி பேராசிரியரின் இயக்கத்தில்

மருதம் – SRM உதவி பேராசிரியரின் இயக்கத்தில்

சினிமா, திரைச் செய்தி
அறுவர் பிரைவேட் லிமிடெட் சார்பில் C வெங்கடேசன் தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் V கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்” ஆகும். சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் அருள்தாஸ், "கஜேந்திரன் சார் முன்பே அறிமுகம். 10 வருடங்கள் முன்பு என்னை அழைத்து ஃபிலிம் இன்ஸ்டியூட் முடித்துள்ளேன். ஒரு குறும்படம் நடித்துத் தாருங்கள் என்றார். பின் இப்போது மீண்டும் அழைத்து படம் செய்வதாகச் சொன்னார். மகிழ்ச்சியுடன் சென்று நடித்தேன். திரையுலகில் சாதிப்பதற்காகத் துடிக்கும் அனைவருக்கும் நான் தோள் கொடுப்பேன். நண்பர் வட தமிழகத்தைச் சேர்ந்தவர். அந்தப் பக்கத்து...