Tag: ரு
ரு – அதுக்கும் மேல.!
மரணத்தையும் தாண்டின தண்டனை ஏதேனும் உண்டா?
உண்டு என்கிறார் தனது படத்துக்கு ரு என்ற வித்தியாசமான தலைப்பு வைத்திருக்கும் இயக்குநர் C. சதாசிவம்.
“ரு” என்றால் ஐந்து. படத்தில் ஐந்து குற்றவாளிகள் உள்ளனர் என யூகிக்க முடிகிறது. பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தருபவர்களுக்கு நாயகன் எத்தகைய தண்டனை வழங்குகிறான் என்பதுதான் ரு படத்தின் கதையாம். இப்படத்தில் நாயகனாக இர்ஃபானும், நாயகியாக ரக்ஷிதாவும் நடித்துள்ளனர். P.R.ஸ்ரீநார்த் என்பவர் இசையமைத்துள்ளார்.
நடிக்க முதல் முறையாக சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்துள்ள இயக்குநர் பேரரசு, “இந்தப் படத்துல எனக்குப் பிடிச்ச தங்கச்சி செண்ட்டிமென்ட் இருக்கு” என்றார்.
சரி.. அந்த ‘அதுக்கும் மேல’ என்னவாக இருக்கும்?...
ரு – படக்குழுவினர்
நடிகர்கள்:
>> இர்ஃபான்
>> ரக்ஷிதா
>> பேரரசு
>> ஆதவன்
>> ரவி
>> அவினாஷ்
>> மீராகிருஷ்ணன்
பணிக்குழு:
>> தயாரிப்பு - வீணா ஆனந்த்
>> இயக்கம் - சதாசிவம்.C
>> ஒளிப்பதிவு – I .நவீங்குமார்
>> இசை – P.R.ஸ்ரீநார்த்
>> படத்தொகுப்பு – L.V.K.தாஸ்
>> நடனம் – ராபர்ட் – ஜாய்மதி
>> பாடல் – S.ஞானகரவேல் – வெ.மதன்குமார்...