Shadow

Tag: வெக்கை நாவல்

அசுரன் விமர்சனம்

அசுரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
லாக்கப் எனும் நாவல் விசாரணை ஆனதை விட, பல மடங்கு வீரியத்துடன், வெக்கை நாவலை அசுரன் எனும் திரைப்படமாக மாற்றியுள்ளார் வெற்றிமாறன். எழுத்தாளர் பூமணியின் மூலக்கதையை மிஞ்சும் அளவு, மிகச் சிரத்தையுடன் திரைக்கதை அமைத்து அசக்தியுள்ளனர் மணிமாறனும் வெற்றிமாறனும். ஒரு நாவல் திரைப்படமான முயற்சியில், இயக்குநர் மகேந்திரனின் 'முள்ளும் மலரும்' பெற்ற இடத்திற்கு நிகராக வைக்கக் கூடிய கலைப்படைப்பாக வந்துள்ளது அசுரன். நிலத்தைக் கையகப்படுத்துவதில் ஏற்படும் தகராறும், அது தொடர்பான கொலையும் பழிவாங்குதலும் தான் படத்தின் கதை என்றாலும் கூட, சமூகத்தில் நிலவி வரும் சாதிய அடக்குமுறைகளும், ஒடுக்கப்பட்டவர்கள் மீது ஏவப்படும் வன்முறைகளுமே படத்தின் அடிநாதம். ஹிந்திப்படமான ஆர்ட்டிகிள் 15 போல் எதையும் உடைத்துப் பேசாவிட்டாலும், இன்னது தான் பேசுகிறோம் என தனது திரைமொழியால் புரிய வைத்துவிடுகிறார் வெற்றிமாறன். அவரது படைப்புகள் தன...