Shadow

Tag: வேலுபிரபாகரன்

ஒரு இயக்குநரின் காதல் டைரி விமர்சனம்

ஒரு இயக்குநரின் காதல் டைரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வேலுபிரபாகரனின் காதல் கதையையே கொஞ்சம் மாற்றங்களுடன் ஒரு இயக்குநரின் காதல் டைரியாக மாற்றிவிட்டார். பெண் ஆணின் உடைமை அல்ல; அப்படி ஆண்கள் நினைப்பதால் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மிகுந்து காணப்படுவதோடு, கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கையும் இங்கே அதிகமாக உள்ளது. "காதல்" என்பது பெண்களை அனுபவிக்கவும், அவர்களின் உடலைத் தெரிந்து கொள்ளவும், முதிரா இளம் ஆணின் மனம் கற்பித்துக் கொள்ளும் கற்பனை. அக்கற்பனையில் இருந்து ஆண்கள் மீள (பெண்கள் மேலாடை அணியாமல் இருந்தால் தேவலை என முந்தைய படத்தில் சொன்னவர்), சிற்பங்களில் ஓவியங்களில் திரைப்படங்களில் எனக் கலைகளில் பெண்ணின் நிர்வான உடம்பைப் பரவலாக பதின் பருவத்தினர்க்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்கிறார் இயக்குநர் வேலுபிரபாகரன். அப்படிச் செய்வதன் மூலம், பெண்களின் உடல்கள் அறிமுகமாகி விடுவதால் அதன் பின் ஆராய ஆண்களுக்குத் தோன்றாது; பாலியல் கொடுமைகள...
வேலுபிரபாகரனின் காதல் கதை விமர்சனம்

வேலுபிரபாகரனின் காதல் கதை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"வேலுபிரபாகரனின் காதல் கதை" என்ற பெயரைப் பார்த்தவுடன் வேலுபிரபாகரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் 'காதல் கதை' என்று நினைத்தால் அது தவறு என்பது படம் பார்த்தவுடன் புரிந்து விடும். படத்தின் முழு பெயரே 'வேலுபிரபாகரனின் காதல் கதை' தான். படத்தில் வேலுபிரபாகரன் ஒரு இயக்குனராகவே வருகிறார். அவர் எடுக்கும் படம் சர்ச்சைக்குள்ளாகி, அந்தப் படத்தை தடை செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு போடப்படுகிறது. ஆட்டோவில் வந்து கொண்டிருக்கும் வேலுபிராகரனைக் குண்டர்கள் சிலர் வழி மறித்து கத்தியால் குத்தி விடுகின்றனர். வேலுபிராபகரனைப் பற்றி அவருக்கு கடைசியாக ஃபோன் செய்த பெண் பத்திரிகை நிருபரை அழைத்து விசாரிக்கின்றனர். பெண் நிருபர் வேலுபிராபகரனின் சர்ச்சைக்குரிய கதையையும், அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட காதலையும் பற்றி காவல் துறையினருக்குச் சொல்கிறார். 'விஷ்ணுபுரம்' என்ற ஊரில் அவர் பார்த்த உண்மைச் சம்பவங்கள் ...