Shadow

Tag: இசையமைப்பாளர் சத்யா

ஒத்த செருப்பு சைஸ் – 7 விமர்சனம்

ஒத்த செருப்பு சைஸ் – 7 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு கொலை வழக்கு விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படுகிறான் மாசிலாமணி. அவ்விசாரணையும், அது சம்பந்தமான முழு நீள உரையாடலும் தான் படம். ஒருவரைச் சுற்றி மட்டுமே நடக்கும் கதையில்லை இது. ஒரு சுவாரசியமான த்ரில்லரில், மற்ற கதாபாத்திரங்களை வெறும் குரல்களாக்கி, மாசிலாமணியாக நடித்திருக்கும் பார்த்திபனை மட்டுமே கேமரா காட்டுகிறது. முழுப் படத்திலும், ஒரு முகம் மட்டுமே திரையில் காட்டப்பட்டாலும், படத்தின் சுவாரசியம் எள்ளளவும் குறையாமல் பார்த்துக் கொள்கிறார் பார்த்திபன். படத்தின் கால அளவு 105 நிமிடங்கள் மட்டுமே! படத்தின் ஓட்டத்திலிருந்து விலகக் கூடாது என்பதற்காக, 120 நிமிடப் படத்தில் இருந்து, சந்தோஷ் நாராயணனின் பாடலையும், சில காட்சிகளையும் நீக்கி மேலும் க்றிஸ்பாகப் படைத்துள்ளார். சிறுவன் மகேஷ், மகேஷின் அம்மா, ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கும் ஒரு காவலர், பெண் காவலர் ரோசி, முன் கோபியான ஏ.சி., ...
புது வேகத்தில் இசையமைப்பாளர் சத்யா

புது வேகத்தில் இசையமைப்பாளர் சத்யா

சினிமா, திரைத் துளி
'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் வெள்ளித் திரையில் இசையமைப்பாளராக தனது இசை பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு', ‘நெடுஞ்சாலை', ‘பொன்மாலை பொழுது', ‘இவன் வேற மாதிரி', ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்', ‘காஞ்சனா - 2' போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் C.சத்யா. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவிற்கு வந்த 6 ஆண்டுகள் கடந்த C.சத்யா, இதுவரை 15 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். சத்யா இசையமைக்கும் ஒவ்வொரு படத்திற்கும் பாடல்களுக்கான புரோகிராமிங், மிக்சிங் என அனைத்து வேலைகளும் இவர் ஒருவரே அதிக மெனக்கெட்டு அவுட்புட் கொடுப்பதில் வல்லவர் என்பதால் இவர் தேர்வு செய்யும் படங்களின் பாடல்களும் இளைஞர்கள் மத்தியில் ரிப்பீட் மோடில் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த மெனக்கெடலின் பொருட்டே, அவர் இசையமைத்த படங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. கோலிவுட்டின் டாப் ஹிரோக்கள் பட வாய்ப்பும் அவருக்குக...