Shadow

Tag: இயக்குநர் தரணிதரன்

சிபிராஜின் ரேஞ்சர் – ஆவ்னி புலியின் உண்மைக் கதை

சிபிராஜின் ரேஞ்சர் – ஆவ்னி புலியின் உண்மைக் கதை

சினிமா, திரைத் துளி
‘ஆவ்னி’ எனும் புலி பல மனிதர்களை உயிருடன் அடித்துச் சாப்பிட்ட சம்பவம் நாடு முழுதும் சர்ச்சையைக் கிளப்பியது. மகாராஷ்டிரா மாநிலத்தில் யாவாத்மல் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் தான் ரேஞ்சர். பர்மா, ஜாக்சன் துரை, ராஜா ரங்குஸ்கி போன்ற கவனித்தக்க படங்களை உருவாக்கிய இயக்குநர் தரணிதரன் இப்படத்தினை எழுதி இயக்குகிறார். சிபிராஜ் நாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன், மது ஷாலினி ஆகிய இருவரும் முக்கிய பாத்திரங்கள் ஏற்க, ஆரா சினிமாஸ் ஜி.மகேஷ் தயாரிப்பில் ரேஞ்சர் படம் விமரிசையாகத் தொடங்கப்பட்டுள்ளது. ஆரா சினிமாஸ் மகேஷ், “ரேஞ்சர் படத்தின் திரைக்கதை வியக்கத்தக்க வகையிலானது. இதுவரை நாம் மனிதர்களைத் தாக்கும் விலங்குகளை மையமாகக் கொண்ட படங்கள் நிறைய பார்த்திருப்போம். அவையாவும் கற்பனைக்களத்தினைக் கொண்டது. ஆனால் ரேஞ்சர் அப்படியானது அல்ல. நம் நாட்டில் நடைபெற்ற நம்பமுடி...
ராஜா ரங்குஸ்கி விமர்சனம்

ராஜா ரங்குஸ்கி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கான்ஸ்டபிள் ராஜாக்கு எழுத்தாளர் ரங்குஸ்கி மீது பார்த்ததும் காதல் வந்துவிடுகிறது. யாரோ ஒரு அநாமதேய தொலைப்பேசி அழைப்பாளர்க்கும் ரங்குஸ்கி மீது காதல். அந்த அநாமதேய தொலைப்பேசி அழைப்பாளர், ராஜாவை ஒரு கொலைக் குற்றத்தில் லாகவமாகக் கோர்த்து விட்டுவிடுகிறான். அதிலிருந்து ராஜாவும் ரங்குஸ்கியும் எப்படி மீண்டனர் என்பதுதான் படத்தின் கதை.எழுத்தாளர் சுஜாதாவிற்குப் படத்தை டெடிகேட் செய்துள்ளனர். ரங்குஸ்கி என்பது எழுத்தாளர் சுஜாதாவின் இயற்பெயரான ரங்கராஜனின் செல்ல வடிவம். நாயகி, சுஜாதாவின் தீவிர ரசிகை என்பதால் தனது புனைப்பெயராகச் சூடிக் கொள்கிறாள். நாயகன் ராஜாவோ, சுஜாதாவின் அதி தீவிர வாசகன். அவனது வீட்டுச் சுவரில் சுஜாதாவின் புகைப்படங்கள். படத்தின் மர்டரி மிஸ்ட்ரியையும் சுஜாதாவின் பாணியில் சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குநர்.தனது பெயரில் பதியப்பட்ட சிம் நம்பரில், தனது குரலிலேயே பேசி அலைக்கழிக்கும் நபர் யாரெ...