32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சிபிராஜின் ரேஞ்சர் – ஆவ்னி புலியின் உண்மைக் கதை

Dinesh R சேலம் Published: 03/09/2019 2 நிமிட வாசிப்பு Updated: 18/10/2019 சினிமா
எழுத்து அளவு:

sibiraj-in-ranger

‘ஆவ்னி’ எனும் புலி பல மனிதர்களை உயிருடன் அடித்துச் சாப்பிட்ட சம்பவம் நாடு முழுதும் சர்ச்சையைக் கிளப்பியது. மகாராஷ்டிரா மாநிலத்தில் யாவாத்மல் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் தான் ரேஞ்சர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

பர்மா, ஜாக்சன் துரை, ராஜா ரங்குஸ்கி போன்ற கவனித்தக்க படங்களை உருவாக்கிய இயக்குநர் தரணிதரன் இப்படத்தினை எழுதி இயக்குகிறார். சிபிராஜ் நாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன், மது ஷாலினி ஆகிய இருவரும் முக்கிய பாத்திரங்கள் ஏற்க, ஆரா சினிமாஸ் ஜி.மகேஷ் தயாரிப்பில் ரேஞ்சர் படம் விமரிசையாகத் தொடங்கப்பட்டுள்ளது.

ஆரா சினிமாஸ் மகேஷ், “ரேஞ்சர் படத்தின் திரைக்கதை வியக்கத்தக்க வகையிலானது. இதுவரை நாம் மனிதர்களைத் தாக்கும் விலங்குகளை மையமாகக் கொண்ட படங்கள் நிறைய பார்த்திருப்போம். அவையாவும் கற்பனைக்களத்தினைக் கொண்டது. ஆனால் ரேஞ்சர் அப்படியானது அல்ல. நம் நாட்டில் நடைபெற்ற நம்பமுடியாத உண்மை சம்பவத்தை, நம்மை பீதியில் ஆழ்த்தும் வகையிலான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

இப்படம் ரசிகர்களுக்கு நேரடி பிரமிப்பான அனுபவம் தரும் வகையில் பிரம்மாண்டமாகத் தயாராகவுள்ளது. அடர்ந்த காட்டுக்குள் தமிழகம், கேரளா, ஆந்திர பிரதேசப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. நிறைய சிஜி, VFX காட்சிகள் படத்தில் இடம்பெறுவதால் அதைத் தத்ரூபமாக தர ஹாலிவுட் கலைஞர்கள் இப்படத்தில் பணிபுரிய உள்ளார்கள். பிரபல இசையமைப்பாளர் அரோல் கரோலி இப்படத்திற்கு இசையமைக்கிறார். கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, சிவா நந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்கிறார். படத்தின் முன் தாயாரிப்பு பணிகள் தற்போது மிகத் திவீரமாக நடைபெற்று வருகிறது. மிக விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.