Shadow

Tag: இயக்குநர் திரு

மிஸ்டர் சந்திரமெளலி – கார்த்திக்கும், கெளதம் கார்த்திக்கும்

மிஸ்டர் சந்திரமெளலி – கார்த்திக்கும், கெளதம் கார்த்திக்கும்

சினிமா, திரைத் துளி
'நவரச நாயகன்' கார்த்திக்கும், அவரது மகன் கெளதம் கார்த்திக்கும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் 'மிஸ்டர் சந்திரமௌலி' படத்தை திரு இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், '''நவரச நாயகன்' கார்த்திக் மற்றும் 'ரங்கூன்', 'இவன் தந்திரன்' போன்ற வெற்றி படங்களைக் கொடுத்து, 'ஹர ஹர மஹாதேவகி' படத்தின் வெற்றியைச் சுவைத்துக் கொண்டிருக்கும் அவரது மகனான கெளதம் கார்த்திக்கும் முதல் முறையாக இணைந்து நடிக்கவுள்ள 'மிஸ்டர் சந்திரமௌலி' படத்தை 'நான் சிகப்பு மனிதன்' புகழ் திரு இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கவுள்ளது என எங்களது தயாரிப்பு நிறுவனம் 'Creative Entertainers and Distributors' சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் சினிமாவில், பல வருடங்களுக்குப் பிறகு, ...