
மாமாங்கம் – 17 ஆம் நூற்றாண்டு வீரனின் கதை
போர் வீரனின் கதையை பிரம்மாண்டமாக சொல்லும் மம்முட்டியின் “மாமாங்கம்” படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. மலையாளத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழ் பதிப்பில் தனது கேரக்டருக்கு குரல் கொடுத்துள்ளார் நடிகர் மம்முட்டி.
படத்தின் இயக்குநர் பத்மகுமார், "மம்முட்டி சாரின் பிரபல்யம், ரசிகர் வட்டம் மலையாள எல்லைகளைக் கடந்தது. இந்திய அளவில் மிகச்சிறந்த நடிகராகப் போற்றப்படுபவர். தமிழில் அவர் பல தொடர் வெற்றிப்படங்களைத் தந்து பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளார். தமிழ்ப்படங்களில் அவரது தமிழ் உச்சரிப்பு மிகத் தெளிவாக, தமிழ் மண் மனம் மாறாததாக இருக்கும். தமிழர்கள் போன்றே பேசும் அவரது தமிழ்மொழி வன்மை, மலையாள நடிகர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தும்.
“மாமாங்கம்” படத்திற்குத் தானே தமிழில் குரல் கொடுப்பதாக அவர் எடுத்துக் கொண்ட சிரத்தை எங்களை வெகுவாக ஆச்சர்யப்படுத்த...

