Shadow

Tag: இயக்குநர் வெற்றி மகாலிங்கம்

கதாநாயகனாகும் ‘அருவி’ மதன்

கதாநாயகனாகும் ‘அருவி’ மதன்

சினிமா, திரைச் செய்தி
அரும்புமீசை குறும்புபார்வை, வெண்ணிலாவீடு, விசிறி போன்ற படங்களை இயக்கியவர் வெற்றிவீரன் மகாலிங்கம். ஒரு சிறிய இடைவெளிக்கு அப்புறம் இரண்டு படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ஒன்று, முன்னணி நிறுவனம் தயாரிக்க 'விடுதலை' நாயகன் சூரி ஹீரோவாக நடிக்கும் படம். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார் வெற்றிவீரன் மகாலிங்கம். "சூரியும் நானும் பால்ய கால நண்பர்கள். எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட அனுபவங்களை வைத்து ரகளையா ஒரு கதை பண்ணினோம். பட்ஜெட் பெரிசு. விரைவில் அந்தப் படம் குறித்த அறிவிப்பு வரும். 'விடுதலை' படத்தில் ஒப்பந்தம் ஆனதிலிருந்து ஒரு விஷயத்தைச் சொல்லிகிட்டே இருப்பார். ‘காமெடியனா என்னை ஏத்துக்கிட்ட மக்கள், இப்போ கதையின் நாயகனா நடிக்கிறத எப்படி ஏத்துக்கப் போறாங்கன்றத நெனச்சாத் தான் கொஞ்சம் பயமா இருக்கு நண்பா' ன்னு சொல்லிக்கிட்டே இருப்பார். இப்போ, விடுதலை ட்ரெய்லர் வந்த பிறகு கிடைக்கிற...
விசிறி விமர்சனம்

விசிறி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அஜித் குமார் ரசிகரும், விஜய் ரசிகரும் ஃபேஸ்புக்கில் ஜென்ம விரோதியாக உள்ளனர். விதி, அஜித் குமார் ரசிகரை ஜென்ம விரோதியான விஜய் ரசிகரின் தங்கையைக் காதலிக்க வைக்கிறது. பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. தலைப்பிற்கு முன் கதாபாத்திரங்களின் பெயர்களைப் போடும்பொழுது, விஜய் மற்றும் அஜீத்தின் படங்களில் இருந்து 'மாஸ் சீன்'களை அழகாகத் தொகுத்துள்ளனர். அந்த விறுவிறுப்பு, படத்தின் முதல் பாதியில் முழுவதும் மிஸ்ஸிங். ஒன்றே முக்கால் மணி நேரம் படம் தான் என்ற போதும், இடைவேளைக்கு முன்னான படம் அசாத்தியமானதொரு பொறுமையைக் கோருகிறது. 'தல வெறியன்' சிவாவாக நடித்திருக்கும் ராம் சரவணா தான் படத்தின் நாயகன். ஒரு பொண்ணை "வால்ட்டு" அடிக்க வேண்டுமென அவர் செய்வது எல்லாம் அசுவாரசியத்தின் உச்சம். மிக நன்றாகக் கலகலப்பாக வந்திருக்க வேண்டிய அத்தியாயம், திரைக்கதையின் பலவீனத்தால் சோடை போய்விடுகிறது. 'தளபதி ரசிகன்' கில்லி சூ...