Shadow

Tag: கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்

கேயாஸ் தியரியும், தொலைந்து போகும் நாயகியும்

கேயாஸ் தியரியும், தொலைந்து போகும் நாயகியும்

சினிமா, திரைத் துளி
இந்திய இராணுவத்தில், 6 வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் இருந்த திரு.M.A.பாலா இயக்குகிற படம், ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’. ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினைகள் இருக்குமென எப்படி நியூட்டனின் விதி சொல்கிறதோ, அதே மாதிரி, உலகின் ஏதோ ஒரு மூலையில் பட்டாம்பூச்சி சந்தோசமாய்ச் சிறகடித்து சுற்றித் திரிவதற்கும், இன்னொரு பக்கம் சம்பந்தமேயில்லாமல் எரிமலைகள் வெடித்துச் சிதறுவதற்கும் கூட ஒரே காரணம் இருக்கலாம் என்கிறது கேயாஸ் தேற்றம். தமிழ் சினிமாக்களில், ‘தசாவதாரம்’ படத்திற்குப் பிறகு இவ்விதியைப் பயன்படுத்தி, சுவாரசியமாய்த் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் M.A.பாலா. ‘டிப்ளமோ இன் ஃப்லிம் மேக்கிங்’ படித்து விட்டு, பல குறும்படங்களையும் டெலி ஃபிலிம்களையும் இயக்கியுள்ளார். பார்க்காத காதல், சொல்லாத காதல் என தமிழ் சினிமாவின் அகராதியில் காதல் இல்லாத பக்கமே இல்லை. இந்தப் படத்தில், தன்னுடைய காதலியைத் தொ...