
அமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’
இந்தி மொழியில் வெற்றிகரமான சீஸன்களுக்குப் பிறகு, அமேசான் ப்ரைம் வீடியோவின் பிரபலமான ஸ்டான்ட்-அப் காமெடி நிகழ்ச்சியான காமிக்ஸ்தான் தமிழிலும் அறிமுகமாகிறது.
மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும், ரசிகர்களுக்குப் பிடித்த, அமேசானின் அசல் தயாரிப்பான காமிக்ஸ்தான் நிகழ்ச்சியின் தமிழ் வடிவம், காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ட்ரெய்லர், சமீபத்தில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தால் வெளியிடப்பட்டது. ப்ரைம் வீடியோ, தமிழ் மொழியில் அசல் தயாரிப்புக்களை தொடங்கியிருப்பதற்கான முதல் படியே இந்த நிகழ்ச்சியின் அறிமுகம். இந்தப் புதிய நிகழ்ச்சியில், தமிழின் 3 முன்னணி நகைச்சுவையாளர்கள் பிரவீன் குமார், கார்த்திக் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆறுமுகம், தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள். மூவருமே அவரவர்க்கான நகைச்சுவைப் பாணியில் நிபுணர்களாக இருப்பவர்கள். இவர்கள் வழிகாட்டும் போட்டியாளர...


