32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ திரைப்படம்

Dinesh R சேலம் Published: 12/08/2026 2 நிமிட வாசிப்பு Movie Posters
எழுத்து அளவு:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பத்தா’ ஆகும். இப்படத்தை, ஸ்டார் ஸ்டுடியோ18 (Star Studio18) மற்றும் பிரபல இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் ப்ரொடக்ஷன் (Cine 1 Studios Production) இணைந்து தயாரிக்கிறது. இப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

‘பத்தா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். ஏற்கெனவே இருவரது கூட்டணியில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மற்றும் சீதக்காதி திரைப்படங்கள் ரசிகர்களிடம் தனித்துவமான வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. விஜய் சேதுபதியின் இயல்பான நடிப்புத் திறனும், தனித்துவமான கதை சொல்லல் பாணியையும் கொண்ட பாலாஜி தரணிதரனின் இயக்கமும் இணைவதால், ‘பத்தா’ வித்தியாசமான திரைப்பட அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இயக்குநர் அட்லி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணி ஏற்கெனவே ஜவான் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. தற்போது ‘பத்தா’ திரைப்படத்தின் மூலம் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். ‘ஜவான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த நிலையில், தற்போது அட்லி வழங்கும் தமிழ்த் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

‘ஜெய் பீம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த லிஜோமோல் ஜோஸ், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு இளைஞர்களின் மனதைக் கவர்ந்த இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவைச் செல்வகுமார்.S.K மேற்கொள்ள, படத்தொகுப்பை ஆர். கலைவாணன் கவனித்துள்ளார். படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக டி. முத்துராஜ் பணியாற்றுகிறார். இப்படத்தின் இணை தயாரிப்பாளராக அஷ்வின் முருகன் பணியாற்றுகிறார். முராத் கெதானி, பிரியா அட்லி, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோர் இணைந்து ‘பத்தா’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.