
ஓஹோ எந்தன் பேபி | Oho Enthan Baby review
'தேன் நிலவு (1961)' எனும் படத்தில், மிக பெப்பியான வார்த்தைகள 64 வருடங்களிற்கு முன்பே பயன்படுத்தி அசத்தியுள்ளார் கவிப்பேரரசு கண்ணதாசன். தற்போதும் வைப் செய்யும்படியான அவரது வார்த்தைகளைத் தலைப்பாகப் படத்திற்குச் சூட்டியுள்ளனர்.
இயக்குநராகும் முயற்சியில் உள்ள அஷ்வின், நடிகரான விஷ்ணு விஷாலைச் சந்தித்து கதை சொல்கிறார். காதல் கதையை எதிர்பார்க்கும் விஷ்ணு விஷாலுக்குத் தனது காதல் கதையையே சொல்கிறார் அஷ்வின். ஆனால், ஈகோவால் மீராவுடன் பிரேக்-அப் ஆகி நிற்கும் காதல் கதையை முழுமைப்படுத்த, மீராவைச் சந்தித்து உண்மைத்தன்மையுடன் கதையை முடிக்கச் சொல்கிறார் விஷ்ணு விஷால். மீராவைச் சந்திக்கச் செல்லும் அஷ்வினின் காதல் கைக்கூடியதா இல்லையா என்பதே படத்தின் முடிவு.
அஷ்வினின் முதல் காதல் பள்ளியில் நிகழ்கிறது. அஷ்வினால் காதலிக்கப்படும் சீனியர் பாத்திரத்தில் வைபவி நடித்துள்ளார். அஷ்வின்க்குக் கிடைக்கும் மொட்டை மாடியி...

