
எங்கள் தங்கம் விமர்சனம் | Engal Thangam review
154 UA+
'மா இன்ட்டி பங்காரம் (Maa Into Bangaram)' எனும் தெலுங்குப் படத்தைத் தமிழில் 'எங்கள் தங்கம்' என டப் செய்துள்ளனர். 'மா இன்ட்டி பங்காரம்' என்றால் 'எங்கள் வீட்டின் தங்கம்' எனப் பொருள்படும். 'எங்கள் தங்கம்' என்ற தலைப்பிற்கு இன்னொரு விசேஷம் உண்டு. எம்ஜியார், ஜெயலலிதா நடிப்பில், 1970இல், 'எங்கள் தங்கம்' என்ற படம் வெளியானது. அப்படத்தைத் தயாரித்தவர்கள் முரசொலி மாறனும், மு.கருணாநிதியும் ஆவர். அவ்விருவரும் கடன் சிக்கலில் இருந்ததால் எம்ஜியாரும் ஜெயலலிதாவும் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் திருமணம் புரிந்த கொண்ட ஸ்வர்ணாவும், மருத்துவர் அனிருத்தும் கிராமத்திற்கு வருகிறார்கள். தங்கையின் நிச்சயம் மற்றும் திருமண நிகழ்விற்கு வருகை தரும் அனிருத்திடம், அவனயுவ்தந்தை ராமய்யா ராஜு முகம் கொடுத்துப் பேச மறுக்கிறார். அநாதை ஆசிரமத்தில் வளர்ந்த ஸ்வர்ணா, எப்படியாவது கணவ...


