
டாக்டர் – 100% பொழுதுபோக்கு சினிமா
KJR ஸ்டுடியோஸ் மற்றும் SK ப்ரொடக்ஷன்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் வகையில், ‘டாக்டர்’ படத்தின் வெளியீடு குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. டாக்டர் படம் வரும் அக்டோபர் 2021 இல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
KJR ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி J.ராஜேஷ், “டாக்டர் திரைப்படம் உருவாக ஆரம்பித்த முதல் நாள் முதலே, இந்தத் திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். தமிழில் புதுமையான, இது போன்ற ஒரு ப்ளாக் காமெடி திரைப்படம், திரையரங்கில் ரசிகர்களுக்கு மிகச் சிறந்த அனுபவத்தைத் தரும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கோவிட் 19 எங்கள் வெளியீட்டு திட்டமிடல்களை மாற்றியது. டாக்டர் திரைப்படம் முழுமையாக முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்ததால், அந்தக் காலகட்டத்தில் பல்வேறு OTT தளங்கள் எங்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தியது. அப்போதும் டாக்டர் திரைப்படத்தைப் பெரிய ...

