Shadow

Tag: சுரேஷ் ராஜகுமாரி

சிறை விமர்சனம் | Sirai review

சிறை விமர்சனம் | Sirai review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இந்த வருடத்தின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது சிறை திரைப்படம். வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரியின் முதற்படத்திலேயே அழுத்தமான முத்திரையைப் பதித்துள்ளார். வேலூர் சிறையில் இருக்கும் அப்துல் ரெளஃப் எனும் கைதியை சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறார் கதிரவன் எனும் போலீஸ் ஏட்டு. அந்தப் பயணத்தின் வாயிலாக, நீதித்துறையின் போதாமைகள், அழுத்தமான காதல் கதை, போலீஸார்க்கு நேரும் சங்கடம், கொம்பு முளைத்தது போல் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் போலீஸாரின் ஆணவப்போக்கு என அழுத்தமான கதை சொல்லியுள்ளார் இயக்குநர். அப்துல் ரெளஃபாக L.K.அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித் குமாரின் மகனாவார். இவரை சினிமாவில் அறிமுகப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட படமிது. அதற்காக லலித் குமார், டாணாக்காரன் தமிழிடம், விசாரணை போலொரு கதை கேட்டுள்ளார். தமிழ் சொன்ன உண்மைக...
சிறை | வெளியீட்டுக்கு முன்பே காரைப் பரிசாக வாங்கிய இயக்குநர்

சிறை | வெளியீட்டுக்கு முன்பே காரைப் பரிசாக வாங்கிய இயக்குநர்

சினிமா, திரைச் செய்தி
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை” ஆகும். வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிறை படத்தின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், பட வெளியீட்டுக்கு முன்னதாகவே செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் SS லலித் குமார் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி அவர்களுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றைப் பரிசாக வழங்கினார். டாணாக்காரன் இயக்குநர் தமிழ், “லலித் சார் என்னிடம் விசாரணை மாதிரி ஒரு படம் செய்ய வேண்டும் என்றார். அவர் நினைத்திருந்தால் அவர் மகனை எப்படி வேண்டுமானாலும் ஒரு படத்தில் நடிக்...