
“சேத்துமான் – ஒரு பரீட்சார்த்த முயற்சி” – இயக்குநர் பா.ரஞ்சித்
நீலம் புரொடெக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் சேத்துமான். இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் Sony Liv இணையதளத்தில் வெளியாகி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.
இயக்குநர் பா.ரஞ்சித், “சேத்துமான் திரைப்படம் ஒரு திரைப்படமா என்பதே எனக்கு முதலில் தெரியவில்லை. அந்தக் கதையை படித்த போது இது ஒரு ஃபீச்சர் ஃப்லிம்மாக இருக்குமா என்கின்ற சந்தேகமும் எனக்கு இருந்தது. என்னோட சந்தேகத்தை நான் இப்படத்தின் இயக்குநர் தமிழிடமும் கேட்டேன். ஆனாலும் இந்தக் கதை என்னை வெகுவாகப் பாதித்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
எனக்கு எப்பொழுதுமே மெயின் ஸ்ட்ரீம் சினிமாக்களைப் போல பேரலல் (Parallel) சினிமாக்கள் என்று சொல்லப்படும் சுயாதீனத் திரைப்படங்கள் மீதும் எனக்கு மிகப்பெரிய ஆர்வம் உண்டு. சுயாதீனத் திரைப்படங்களில் இருக்கின்ற ...

