
“மிர்ச்சி மியூசிக் விருதுகள் மாற்றுத் திறனாளிகளுக்கு சமர்ப்பனம்” – அருண்மொழி மாணிக்கம்
டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் வெளியான ‘சைக்கோ’ படத்திற்கு, ‘2021 ஆம் ஆண்டிற்கான இசையமைப்பாளர்’, ‘2021 ஆம் ஆண்டிற்கான பாடலாசிரியர்’, ‘2021 ஆம் ஆண்டிற்கான பாடல்’ என மூன்று பிரிவுகளில் மிர்ச்சி மியூசிக் விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது.
மிர்ச்சி மியூசிக் நிறுவனம் ஆண்டுதோறும் தென்னிந்தியத் திரையிசையுலகில் வெவ்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு, விருது வழங்கி கௌரவித்து வருகிறது. ‘2021 ஆம் ஆண்டிற்கான இசையமைப்பாளர்’ என்ற பிரிவில் ‘சைக்கோ’ படத்திற்கு இசையமைத்ததற்காக இசைஞானி இளையராஜாவுக்கும், ‘2021 ஆண்டிற்கான பாடலாசிரியர் ’பிரிவில், ‘சைக்கோ’ படத்தில் இடம்பெற்ற ‘உன்ன நெனச்சு' எனத் தொடங்கும் பாடலை எழுதியதற்காகப் பாடலாசிரியர் கபிலனுக்கும், ‘2021 ஆண்டிற்கான பாடல்’ பிரிவில், ‘சைக்கோ’ படத்தைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனமான டபுள் மீனிங் ...



