
தமிழ் திரையுலகில் அழுத்தமாக தடம் பதிக்கும் பாபி பாலச்சந்திரனின் ‘பி டி ஜி யுனிவர்சல்’
உலகளாவிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாபி பாலச்சந்திரன்- இவர் நிறுவனங்கள் தங்கள் தரவு தனி உரிமை, இணக்கப்பாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள வழக்கு அபாயங்களை நிவர்த்தி செய்ய உதவும் தீர்வுகளை உருவாக்குவதில் மிகவும் பிரபலமானவர். இவர் தற்போது BTG யுனிவர்சல் எனும் பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.பி டி ஜி யுனிவர்சல் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக இயக்குநர் அஜய் ஆர். ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிக்கும் தமிழ் திகில் திரைப்படமான 'டிமான்டி காலனி 2' உருவாகி இருக்கிறது.சமீபத்தில் வெளியான இப்படத்தின் முன்னோட்டம் அனைத்து தரப்பு ரசிகர்களையும், திரையுலகினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.இது தொடர்பாக பாபி பாலச்சந்திரன் பேசுகையில், ''டிமான்டி காலனி 2 இந்த தசாப்தத்தில் மிகவும் விரும்பப்படும் திகில் படமாக இருக்கும் என்று நான் உறுதியாக ...



