32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

Bang Bang டீசர்

Dinesh R சேலம் Published: 17/08/2026 2 நிமிட வாசிப்பு Updated: 18/08/2026 Teaser
எழுத்து அளவு:

KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் பிரபு தேவா, வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்திருப்பதால், படம் தொடக்கத்திலேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், டீசர் அந்த எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.

டீசரில் எரிமலை வெடித்து லாவா பாயும் வித்தியாசமான நிலப்பரப்பில் வித்தியாசமான தோற்றத்தில் பிரபு தேவாவும் வடிவேலுவும் தோன்றுகின்றனர். அவர்களை ஜாம்பிகளாக மாறிய மனிதர்கள் துரத்த, அவர்களிடமிருந்து தப்பிக்கும் ஆக்ஷன் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. ஜாம்பிகள், எரிமலை, ஆபத்தான சூழல் என ஒரு பக்கம் பதற்றத்தை உருவாக்கினாலும், வடிவேலுவின் உடல்மொழியும் நகைச்சுவையும் அந்த டென்ஷனை உடைத்து சிரிப்பை வரவழைக்கிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

பிரபு தேவா மற்றும் வடிவேலு இருவரும் இணைந்து நடித்த காலகட்டத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற கூட்டணியாக இருந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்திருப்பதால், “பேங் பேங்” படத்திற்கு இந்தக் கூட்டணி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே வெளியான டைட்டில் டீசரில் ஜாம்பிகளுக்கு நடுவே துப்பாக்கியுடன் இருவரும் தோன்றிய காட்சிகள் கவனம் பெற்றிருந்தன. தற்போது வெளியாகியுள்ள டீசர், படம் ஆக்ஷன், ஹாரர், அட்வென்ச்சர் மற்றும் காமெடி கலந்த கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகியிருப்பதைக் காட்டுகிறது.

சாம் ரோட்ரிகஸ் எழுதி இயக்கும் இப்படத்தை KRG கண்ணன் ரவி தயாரிக்கிறார். தீபக் ரவி இணை தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். H.C. வேணு ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்க, ஆண்டனி படத்தொகுப்பை கவனிக்கிறார். டான் பாலா கலை இயக்கம் செய்கிறார்.

இந்தோனேசியாவின் மெளன்ட் ப்ரோமோ (Mount Bromo) எரிமலைப் பகுதி மற்றும் மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள நிலையில், படத்தின் முழுப் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. நடிகர் பப்லு பிரித்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.