32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

துல்கர் சல்மான்

19 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன
“I am Game – ஒரு தமிழ்ப்படம் என்ற உணர்வைத் தரும்” – துல்கர் சல்மான அயல் சினிமா முக்கியச் செய்தி
02/09/2026 Dinesh R 4 நிமிட வாசிப்பு

“I am Game – ஒரு தமிழ்ப்படம் என்ற உணர்வைத் தரும்” – துல்கர் சல்மான

“I am Game – ஒரு தமிழ்ப்படம் என்ற உணர்வைத் தரும்” – துல்கர் சல்மான துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “I Am Game” திரைப்படத்தின் பிரம்மாண்டமான முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படம் வரும் செப்டம்பர் 3, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிகழ்வில் பேசிய கதிர், “‘I Am Game’ படம் நிறைய சர்ப்ரைஸ் அம்சங்களைக் கொண்ட ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். ட்ரெய்லரில் நீங்கள் […]

முழுமையாகப் படிக்க
செய்திகள் வரிசை (பக்கம் 1)
I am Game – துல்கர் சல்மானின் ஸ்டைலிஷ் மலையாளப்படம் Trailer

I am Game – துல்கர் சல்மானின் ஸ்டைலிஷ் மலையாளப்படம்

துல்கர் சல்மானின் ‘ஐ ஆம் கேம் (I am Game)’ திரைப்படத்தின் அதிரடி ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இந்த மெகா பட்ஜெட் ஃபேன்டஸி த்ரில்லர், அவரது திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய திரைப்படமாக உருவாகியுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படத்தைத் துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். சஜிர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர், […]

01/08/2026 Dinesh R
லோகா: 10 நாட்களில் 100 கோடி வசூல் அயல் சினிமா

லோகா: 10 நாட்களில் 100 கோடி வசூல்

துல்கர் சல்மானின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த லோகா: சாப்டர் 1 – சந்திரா உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, 10 நாட்களில் 100 கோடி வசூலைக் குவித்து பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம் ஒரு புதிய சூப்பர் ஹீரோ உலகை அறிமுகப்படுத்தி, மலையாள சினிமாவை உலகளவில் கொண்டு சென்றுள்ளது. வேஃபேரர் ஃபிலிம்ஸ் பேனரில் ஏழாவது படைப்பாக உலகத் தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாளப் படம், கேரளாவின் எல்லைகளைத் […]

05/09/2025 Dinesh R
Wayfarer Films – துல்கர் சல்மானின் லோகா அயல் சினிமா

Wayfarer Films – துல்கர் சல்மானின் லோகா

துல்கர் சல்மானின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் ஒன் – சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. வேஃபேரர் ஃபிலிம்ஸ் பேனரில் உருவான ஏழாவது படமிது. உலகத்தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாளப்படம், கேரளாவின் எல்லைகளைத் தாண்டி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. படம் மட்டுமல்லாமல், துல்கர் சல்மானுக்கும் வேஃபேரர் ஃபிலிம்ஸ்க்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இப்படத்தின் மூலம் புதிய சூப்பர் ஹீரோ சினிமாடிக் யூனிவர்ஸ் தொடங்கப்பட்டுள்ளது. எல்லைகளை […]

01/09/2025 Dinesh R
Lokah Chapter 1: Chandra விமர்சனம் அயல் சினிமா

Lokah Chapter 1: Chandra விமர்சனம்

இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோயின் படம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது இப்படம். தன் சக்திகளை மறைத்துக் கொண்டு, பெங்களூருவில் சாதாரணளாக வாழ்கிறாள் சந்திரா. சந்திராவின் சக ஊழியை மிரட்டும் முருகேசனைத் தாக்குகிறாள் சந்திரா. உடலுறுப்புகளுக்காக மனிதர்களைக் கடத்தும் முருகேசனும், அவனது ஆட்களும் சந்திராவைக் கடத்துகின்றனர். சந்திராவைக் காப்பாற்ற விரையும் அவளது பக்கத்து வீட்டுக்காரப் பையனான சன்னிக்கு, சந்திரா தான், கேரளத் தொன்மவியல் வியந்தோதும் கள்ளியங்காட்டு நீலி எனத் தெரிய வருகிறது. காணாமல் போகும் முருகேசனை விசாரிக்கும் காவலதிகாரி […]

31/08/2025 Dinesh R
MYSAA – ராஷ்மிகாவின் ஆக்‌ஷன் அவதாரம் அயல் சினிமா

MYSAA – ராஷ்மிகாவின் ஆக்‌ஷன் அவதாரம்

ராஷ்மிகா மந்தனா நடிக்கும், கதாநாயகியை மையப்படுத்திய புதிய திரைப்படத்திற்கு “மைசா” எனப் பெயரிடப்பட்டுள்ளது. ராஷ்மிகாவின் அட்டகாசமான ஆக்‌ஷன் அவதாரத்தை வெளிக்காட்டும்படி அப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குநர் ஹனு ராகவபுடியின் உதவியாளராகப் பணியாற்றிய ரவீந்திர புள்ளே இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். Unformula Films நிறுவனம் இந்தப் படத்தை மிகப் பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படைப்பாக இப்படத்தைத் தயாரிக்கிறது. அஜய் மற்றும் அனில் சாய்யபுரெட்டி தயாரிக்கும் இப்படத்தில், இணைத் தயாரிப்பாளராக சாய் கோபா பணியாற்றுகிறார். இப்படத்தின் […]

28/06/2025 Dinesh R
மிஷ்கின் @ DQ 40 படப்பூஜை| I am Game அயல் சினிமா

மிஷ்கின் @ DQ 40 படப்பூஜை| I am Game

Wayfarer Films தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் துல்கர் சல்மானின் 40 ஆவது திரைப்படமான “ஐ அம் கேம்” படத்தின் பூஜை, இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் மற்றும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ் உட்பட படக்குழுவினர் கலந்து கொள்ளத் திருவனந்தபுரத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. “RDX” புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில், அபூபக்கர் மற்றும் பிலால் மொய்தூ ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை ஆதர்ஷ் சுகுமாரன் […]

05/05/2025 Dinesh R
லக்கி பாஸ்கர் – வங்கி காசாளராக துல்கர் சல்மான் Movie Posters

லக்கி பாஸ்கர் – வங்கி காசாளராக துல்கர் சல்மான்

ஒவ்வொரு பார்வையாளர்களும் பார்த்து ரசிக்கக்கூடிய நல்ல படங்களைக் கொடுத்து வரக்கூடிய சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார் துல்கர். தன்னுடைய கதை மற்றும் படத்தின் கதாபாத்திரங்களை ரசிகர்கள் விரும்பும்படி தனித்துவமாகக் கொடுத்து வரக்கூடிய இயக்குநர் வெங்கி அட்லூரி, ஒரு வங்கி காசாளராக துல்கர் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ படத்தை இயக்கியுள்ளார். துல்கர் சல்மான் நடிகராக 12 ஆண்டுகள் திரைத்துறையில் நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில், படத்தின் முதல் தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் வங்கியில் பணிபுரியும் பேங்க் கேஷியராக […]

03/02/2024 Dinesh R
King of Kotha விமர்சனம் இது புதிது

King of Kotha விமர்சனம்

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறாம் (1996) காலகட்டத்தில் கோதா என்னும் ஊரைத் தங்கள் கட்டுபாட்டிற்குள் வைத்துக் கொள்ள நினைக்கும் சில கூட்டங்களுக்கு இடையேயான யுத்தமும், ஒட்டு மொத்த கூட்டத்தையும் துடைத்துத் தூக்கிப் போட நினைக்கும் காக்கிச் சட்டைகளின் காய் நகர்த்துதலுக்கும் இடையேயான அன்பும் நட்பும் காதலும் ஏமாற்றமும் துரோகமும் வயோதிகமும் இரத்தமும், இதனோடு பெண்களின் அரசியலையும் உள்ளடக்கியது தான் ‘கிங் ஆஃப் கோதா’வின் கதை. கோதா என்னும் ஊர் எப்படி நிர்மாணிக்கப்பட்டது என்பதான கார்ட்டூன் கதை சொல்லலுடன் […]

25/08/2023 Dinesh R
மெல்ஃபெர்ன் 23′ விருதை வென்ற ‘சீதா ராமம்’ சினிமா

மெல்ஃபெர்ன் 23′ விருதை வென்ற ‘சீதா ராமம்’

  ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலிய கண்டத்தில் உள்ள மெல்போர்ன் நகரில் இந்தியத் திரைப்பட விழா நடத்தப்படுவதும் அவற்றில் சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து விருது அளிப்பதும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மெல்போர்ன் நகரில் 14வது இந்தியத் திரைப்பட விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த திரைப்படத்திற்கானப் பிரிவில் போட்டியிட்ட “சீதா ராமம்” திரைப்படம் அப்பிரிவில் விருதை வென்றிருக்கிறது. சென்ற ஆண்டு துல்கர் சல்மான் – மிருணாள் தாக்கூர் ஆகியோர் நடிப்பில் ஹனுராகவ புடி இயக்கத்தில் வெளிவந்த […]

14/08/2023 Inbaaraja
சீதா ராமம் விமர்சனம் இது புதிது

சீதா ராமம் விமர்சனம்

கதை, திரைக்கதை, நடிப்பு, மேக்கிங், ஒளிப்பதிவு, இசை, உடை வடிவமைப்பு, நடனம் என எல்லா வகையிலும் நிறைவைத் தருகிறது சீதா ராமம். காஷ்மீர், காதல் என மனதைக் குளிர வைக்கும் படம். பாகிஸ்தான் பிரிகேடியர் தாரிக்கின் பேத்தி அஃப்ரீன், 1965 இல் இந்தியன் லெஃப்டினென்ட் ராம் எழுதிய கடிதத்தை அவரது காதலி சீதா மகாலக்‌ஷ்மியிடம் ஒப்படைக்க, 1985 ஆம் ஆண்டு இந்தியா வருகிறார். அஃப்ரீனின் தேடல் படலத்தில், ராம் – சீதாவின் காதல் அழகாய் மொட்டவிழ்த்து மலரத் […]

06/08/2022 Dinesh R
சீதா ராமம் – காஷ்மீரின் பனி படர்ந்த பின்னணியில் காதல் Songs

சீதா ராமம் – காஷ்மீரின் பனி படர்ந்த பின்னணியில் காதல்

நடிகர் துல்கர் சல்மான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சீதா ராமம்’ எனும் படத்தில் இடம்பெற்ற மூன்றாவது பாடல் வெளியாகி இருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டிருக்கிறார். மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘சீதா ராமம்’ எனும் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை […]

20/07/2022 Dinesh R
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம் சினிமா

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம்

இடைவேளையின் பொழுது ஓர் எதிர்பாராத ட்விஸ்ட், படத்தின் முடிவில் புன்னகையை வரவைக்கும் ஒரு ட்விஸ்ட் என படம் ஸ்வீட் சர்ப்ரைஸாய் வந்துள்ளது. படத்தின் தலைப்பைக் கொண்டே இது ஓர் அழகான காதல் படமென யூகிக்கலாம். அப்படிக் காதல் படமாக மட்டும் தேங்கிவிடாமல், ஆன்லைன் குற்றத்தையும், டெக்னிக்கல் குற்றத்தையும், அவற்றை நூல் பிடித்துத் தொடரும் காவல்துறையின் சாமர்த்தியத்தையும் அழகாகக் கலந்து கொடுத்துள்ளார் இயக்குநர் தேசிங் பெரியசாமி. துல்கர் சல்மானும், ரிது வர்மாவும் ஒரு காதல் ஜோடி என்றால் விஜய் […]

28/02/2020 Dinesh R
நடிகையர் திலகம் விமர்சனம் அயல் சினிமா

நடிகையர் திலகம் விமர்சனம்

சினிமா, இன்றளவும், ஆண்கள் மட்டுமே கோலேச்சி வரும் துறையாக உள்ளது. டி.பி.ராஜலட்சுமி, பானுமதி, சாவித்திரி போன்ற மிகச் சிலரே விதிவிலக்குகளாகத் தங்களுக்கான முத்திரையை அழுத்தமாகத் திரையுலகில் பதித்துள்ளனர். துடுக்கான உடற்மொழியாலும், துள்ளலான பாவனைகளாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்ற கலைஞர் சாவித்திரி. அவரைப் பற்றிய ‘பையோ-பிக்’ படமாகத் தெலுங்கில் “மகாநதி” என படம் எடுத்துள்ளார் நாக் அஷ்வின். மிக அற்புதமான ஒரு காண் அனுபவத்தைப் படம் தருகிறது. தமிழ் டப்பிங்கும் உறுத்தாமல், தேவையான இடத்தில் தெலுங்கு […]

11/05/2018 Dinesh R