32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“I am Game – ஒரு தமிழ்ப்படம் என்ற உணர்வைத் தரும்” – துல்கர் சல்மான

Dinesh R சேலம் Published: 02/09/2026 4 நிமிட வாசிப்பு Updated: 04/09/2026 அயல் சினிமா
எழுத்து அளவு:

“I am Game – ஒரு தமிழ்ப்படம் என்ற உணர்வைத் தரும்” – துல்கர் சல்மான

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “I Am Game” திரைப்படத்தின் பிரம்மாண்டமான முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படம் வரும் செப்டம்பர் 3, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிகழ்வில் பேசிய கதிர், “‘I Am Game’ படம் நிறைய சர்ப்ரைஸ் அம்சங்களைக் கொண்ட ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். ட்ரெய்லரில் நீங்கள் பார்த்ததைத் தாண்டிப் படத்தில் இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு ஒரு அனுபவமாக அமையும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஒளிப்பதிவும் முக்கிய அம்சமாக இருக்கும்.

இந்தப் படத்தில் கிரிக்கெட் கேப்டனாக நடித்துள்ளேன். ஆனால் இதற்கு முன்பு நான் கிரிக்கெட் விளையாடிய அனுபவமே மிகக் குறைவு. பள்ளிக் காலத்தில் கிரிக்கெட் விளையாடியதோடு சரி; என்னைக் கேப்டனாக நடிக்க வைத்த இயக்குநரின் தைரியம் உண்மையிலேயே ஆச்சரியமானது. இந்தப் படத்திற்காகக் கிரிக்கெட்டையும் புதிதாகக் கற்றுக்கொண்டு நடித்தேன். இதற்குப் பிறகு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறலாம் என்ற அளவுக்கு அந்த அனுபவம் இருந்தது. இந்தப் படத்திற்குப் பின்னால் மிகப்பெரிய உழைப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. குறிப்பாக, புதிய கதைகள் மற்றும் வித்தியாசமான முயற்சிகளில் ரிஸ்க் எடுக்கும் துல்கர் சல்மானின் சினிமா மீதான ஆர்வம் மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது” என்றார்.

சம்யுக்தா விஸ்வநாதன், “சிறு வயதிலிருந்தே சினிமாவை ரசித்து வளர்ந்த எனக்கு, ஒரு படம் பார்க்கும்போது ஏற்படும் உணர்வும் தாக்கமும் மிகவும் முக்கியம். அந்த வகையில், ‘I Am Game’ படத்தின் கதையை இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் முதன்முறையாகக் கூறியபோதே, இதில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று உடனடியாக முடிவு செய்தேன்.

இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதாகவும், எனது மனதைத் தொட்டதாகவும் இருந்தது. படப்பிடிப்பின்போது குறிப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்ற நீண்ட ஷெட்யூல் எனக்கு ஒரு சிறந்த பயிற்சியைப் போன்ற அனுபவமாக அமைந்தது. ஒரு காட்சிக்குத் தேவையான உணர்வை மிகக் குறுகிய நேரத்தில் வெளிப்படுத்த வேண்டியிருந்தது சவாலாக இருந்தாலும், அது நடிப்பில் எனக்கு நிறையக் கற்றுத்தந்தது” என்றார்.

துல்கர் சல்மான், “ ‘I Am Game’ படத்தைப் பார்க்கும்போது, அது கிட்டத்தட்ட ஒரு தமிழ்ப் படம் போன்ற உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும். இதில் ஏராளமான தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் இதுவரை உருவான மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் பிரம்மாண்டமான தயாரிப்பு இதுதான்.

படத்தில் நடித்துள்ள கதிரின் நடிப்பு மிகவும் இயல்பாகவும் தீவிரமாகவும் அமைந்துள்ளது. குறிப்பாகப் படத்தில் அவர் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் மிகவும் நம்பகத்தன்மையுடன் நடித்துள்ளார். மிஷ்கின் இந்தப் படத்தின் முக்கியமான அங்கம். அவரது அளவுக்கான உற்சாகமும் எனர்ஜியும் இன்றைய இளம் தலைமுறையினரிடமே அரிதாகத்தான் பார்க்க முடியும்.

சம்யுக்தா விஸ்வநாதனுக்கு இந்தப் படம் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையும். ஆண்டனி வர்கீஸ் பெப்பே, இந்தப் படத்தின் முக்கியமான பலம். மலையாளத்தில் பெரிய படங்களில் ஹீரோவாக நடித்து வரும் அவர், இந்தப் படத்திலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் வகையில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். அவரைத் தமிழ் ரசிகர்களும் நிச்சயம் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

ஜேக்ஸ் பிஜாயின் இசையில் இந்தப் படம் ஒரு அசத்தலான ஹிட் ஆல்பமாக அமையும். ஏற்கெனவே வெளியான பாடல்களைத் தாண்டி, படத்தில் ரசிகர்களைக் கவரும் மேலும் பல பாடல்கள் உள்ளன.

‘I Am Game’ முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இதில் காமெடி, ரொமான்ஸ், மர்மம், சஸ்பென்ஸ், ஆக்ஷன், த்ரில்லிங் மற்றும் கேமிங் என ரசிகர்களை கவரும் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன” என்றார்.

துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் பிரம்மாண்ட ஃபேண்டஸி த்ரில்லர் திரைப்படம், அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படம், துல்கர் சல்மானின் 40 ஆவது திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து Wayfarer Films பேனரில் தயாரித்துள்ள இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபு பக்கர் மற்றும் பிலால் மொய்து ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை சஜீர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷபாஸ் ரஷீத் ஆகியோர் எழுதியுள்ளனர். ஆக்‌ஷன் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்ஸ் வடிவமைத்துள்ளனர். Zee Music நிறுவனம் இப்படத்தின் இசை உரிமையைக் கைப்பற்றியுள்ளது.

“I Am Game” மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாகிறது.

ஏற்கெனவே வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இந்த முன் வெளியீட்டு விழா படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

தொழில்நுட்பக் குழு:-

லைன் புரொட்யூசர் – பிபின் பெரும்பில்லி
ஒளிப்பதிவு – ஜிம்ஷி காலித்
இசை – ஜேக்ஸ் பிஜாய்
எடிட்டிங்: சாமன் சாக்கோ
புரொடக்‌ஷன் ஹெட்ஸ்: சுஜாய் ஜேம்ஸ், தேவதேவன்
புரொடக்‌ஷன் டிசைனர்: அஜயன் சாலிசேரி
ஆக்ஷன்: அன்பறிவ் மாஸ்டர்ஸ்
மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்
காஸ்ட்யூம்: மஷார் ஹம்சா
புரொடக்‌ஷன் கன்ட்ரோலர்: தீபக் பரமேஸ்வரன்
அசோசியேட் இயக்குநர்: ரோஹித் சந்திரசேகர்
பாடல்கள்: மனு மஞ்சித், விநாயக் சசிகுமார்
VFX: தௌஃபீக் (Eggwhite)
போஸ்டர் டிசைன்: Ten Point
சவுண்ட் டிசைன்: Sync Cinema
சவுண்ட் மிக்ஸ்: கண்ணன் கணபதி
ஸ்டில்ஸ்: SBK
மார்க்கெட்டிங் ஹெட்: விஜித் விஸ்வநாதன்
மக்கள் தொடர்பு: யுவராஜ்

 

 

 

 

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.