
ராஷ்மிகா மந்தனா நடிக்கும், கதாநாயகியை மையப்படுத்திய புதிய திரைப்படத்திற்கு “மைசா” எனப் பெயரிடப்பட்டுள்ளது. ராஷ்மிகாவின் அட்டகாசமான ஆக்ஷன் அவதாரத்தை வெளிக்காட்டும்படி அப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குநர் ஹனு ராகவபுடியின் உதவியாளராகப் பணியாற்றிய ரவீந்திர புள்ளே இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். Unformula Films நிறுவனம் இந்தப் படத்தை மிகப் பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படைப்பாக இப்படத்தைத் தயாரிக்கிறது. அஜய் மற்றும் அனில் சாய்யபுரெட்டி தயாரிக்கும் இப்படத்தில், இணைத் தயாரிப்பாளராக சாய் கோபா பணியாற்றுகிறார்.
இப்படத்தின் போஸ்டரைத் தெலுங்கில் இயக்குநர் ஹனு ராகவபுடியும், தமிழில் தனுஷும், இந்தியில் விக்கி கௌஷலும், மலையாளத்தில் துல்கர் சல்மானும், கன்னடத்தில் சிவராஜ்குமாரும் ஆகியோர் போஸ்டர்களை வெளியிட்டனர்.

மைசா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், ஒரு பாரம்பரிய புடவையில், பழங்குடி நகைகள் மற்றும் மூக்குத்தியுடன் காட்சியளிக்கும் ராஷ்மிகா, கோண்ட் பழங்குடியினத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தோற்றத்தில் பயமுறுத்தும் முகபாவனையுடன் காட்சியளிக்கிறார். கோண்ட் பழங்குடியினரின் சுவாரசியமான உலகத்தை மையமாகக் கொண்ட மிகவும் உணர்ச்சிகரமான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் இது.
படத்தைக் குறித்து பேசிய இயக்குநர் ரவீந்திர புள்ளே, “மைசா இரண்டு வருடங்கள் உழைத்து உருவாக்கிய திரைப்படம். இப்படத்தின் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்துள்ளோம், கதை, கதாபாத்திரங்கள், கலை நுணுக்கம் என அனைத்தும் ரசிகர்களைக் கவரும். இப்போது, இந்தக் கதையை உலகிற்கு சொல்லத் தயாராக இருக்கிறோம்” என்றார்.
“மன உறுதியுடன் பெரும் உழைப்புடன் உருவாக்கப்பட்ட படம் இது. இது அவளின் கதை, அவள் கர்ஜிக்கிறாள். அதைக் கேட்க வேண்டாம், ஆனால் பயப்பட வேண்டும். @IamRashmika தனது மிரட்டலான அவதாரத்தில் #MYSAA ஆக அசத்தியுள்ளார்” என்று படத்தைக் குறித்துத் தயாரிப்பு நிறுவனம் பதிவிட்டுள்ளது.
திரைப்படக்குழு:-
நாயகி – ராஷ்மிகா மந்தனா
இயக்கம் & எழுத்து – ரவீந்திர புள்ளே
தயாரிப்பாளர்கள் – அஜய் & அனில் சாய்யபுரெட்டி
இணை தயாரிப்பாளர் – சாய் கோபா
தயாரிப்பு நிறுவனம் – Unformula Films
மக்கள் தொடர்பு – சதீஷ்குமார், S2 Media


