32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

I am Game – துல்கர் சல்மானின் ஸ்டைலிஷ் மலையாளப்படம்

Dinesh R சேலம் Published: 01/08/2026 2 நிமிட வாசிப்பு Updated: 04/08/2026 Trailer
எழுத்து அளவு:

துல்கர் சல்மானின் ‘ஐ ஆம் கேம் (I am Game)’ திரைப்படத்தின் அதிரடி ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இந்த மெகா பட்ஜெட் ஃபேன்டஸி த்ரில்லர், அவரது திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய திரைப்படமாக உருவாகியுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படத்தைத் துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சஜிர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர், பிலால் மொய்து ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள நிலையில், வசனங்களை சஜிர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன், ஷபாஸ் ரஷீத் ஆகியோர் எழுதியுள்ளனர்.

கண்கவர் காட்சியமைப்புகள், பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள், அதிவேக சேஸ் சீக்வென்ஸ்கள் என இதற்கு முன் மலையாள சினிமாவில் அரிதாகக் காணப்பட்ட ஸ்டைலிஷ் ஃபேன்டஸி த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. தென்னிந்தியாவின் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக அமையவுள்ளது.

இப்படத்தின் இசை உரிமையை ஜீ மியூசிக் கைப்பற்றியுள்ளது. “லோகா” திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு Wayfarer Films தயாரிக்கும் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள “ஐ ஆம் கேம்”, துல்கர் சல்மானின் 40 ஆவது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. “RDX” திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் அடுத்த திரைப்படமாகவும் இது அமைந்துள்ளது.

“ஐ அம் கேம்” திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக ஆகஸ்ட் 20-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

தொழில்நுட்பக் குழு விவரங்கள்:-

லைன் தயாரிப்பாளர் – பிபின் பெரும்பில்லி
ஒளிப்பதிவு – ஜிம்ஷி காலித்
இசை – ஜேக்ஸ் பிஜாய்
படத்தொகுப்பு – சமன் சாக்கோ
தயாரிப்பு நிர்வாகிகள் – சுஜோய் ஜேம்ஸ், தேவதேவன்
தயாரிப்பு வடிவமைப்பு – அஜயன் சாலிசேரி
ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர்
உடை வடிவமைப்பு – மஷார் ஹம்சா
தயாரிப்பு ஒருங்கிணைப்பு – தீபக் பரமேஸ்வரன்
உதவி இயக்குநர் – ரோஹித் சந்திரசேகர்
பாடல்வரிகள் – மனு மஞ்சித், விநாயக் சசிகுமார்
VFX – தௌஃபீக் (எக்வொயிட்) (Eggwhite)
போஸ்டர் வடிவமைப்பு – டென் பாயிண்ட்
ஒலி வடிவமைப்பு – சிங்க் சினிமா
சவுண்ட் மிக்ஸ் – கண்ணன் கணபதி
ஸ்டில்ஸ் – எஸ்.பி.கே
மார்க்கெட்டிங் தலைவர் – விஜீத் விஸ்வநாதன்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.