
உதயநிதியை நிமிர வைக்கும் படம்
மூன் ஷாட் எண்டர்டெயின்மென்ட் சந்தோஷ் T.குருவில்லா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி, இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் படம் ''நிமிர்''. ப்ரியதர்ஷன் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு தர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.
“ப்ரியதர்ஷன் எனக்கு மிகவும் பிடித்த ஒரு இயக்குநர். அவர் படத்தில் 2 நொடிகள் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் நடித்திருப்பேன். ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து வந்தும் இவ்வளவு சாதாரண மனிதராக இருக்கிறார் உதயநிதி. இந்தப் படத்தில் நான் தான் ஜூனியர், எல்லோருமே என்னை விட பெரிய சாதனையாளர்கள்” என்றார் நாயகி பார்வதி.
“தமிழில் ‘நிமிர்’ எனது 3வது படம். இந்த படத்தில் எப்போதும் உன்மேல் ஞாபகம், நெஞ்சில் மாமழை என இரண்டு பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறேன். நான் ப்ரியதர்ஷன் படத்துக்கு இசையமைக்கிறேன் எனச் சொன்னதை யாரும்...



