Shadow

Tag: பிரபாஸ் சாஹோ

சாஹோ – 4 நாட்களில் 330 கோடி வசூல்!

சாஹோ – 4 நாட்களில் 330 கோடி வசூல்!

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
இந்திய சினிமாவின் சாதனைகள் அனைத்தையும் முறியடித்து 330 கோடியை 4 நாட்களில் குவித்து புது சாதனை படைத்திருக்கிறது பிரபாஸின் சாஹோ. தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாததால், வசூலில் இங்கே சற்றே சுணக்கம் நிலவுகிறது. ஆனால், இந்திய அளவில் படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்து வருகிறது. இந்தியாவிற்கே ஒரு வழி என்றால், தமிழகத்திற்கு மட்டும் தனி வழி என்பதைப் பாராளுமன்றத் தேர்தலில் நிரூபித்தது போல், சாஹோ பட வசூலிலும் நிரூபித்துள்ளது. வெளியான முதல் நாளிலேயே 100 கோடியைக் கடந்து சாதனை படைத்த சாஹோ படம், இரண்டாம் நாளில் உலகளவில் 205 கோடியைக் கடந்தது. வசூலில் புயலாய்ப் பாய்ந்து, இந்தியாவில் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் சாதனையை எளிதாய் முறியடித்தது. விநாயகர் சதுர்த்தி தினமான நேற்றைய திங்கட்கிழமையிலும் 14.20 கோடியைக் குவித்துள்ளது. வெளியான 4 நாட்களில் இந்தியாவின் அனைத்து சாதனைகளையும் தகர்த்தெறிந...
சாஹோ விமர்சனம்

சாஹோ விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
சாஹோ என்றால் 'வெற்றி உனதே!' எனப் பொருள்படும் என பிரபாஸ் பேட்டியில் கூறியுள்ளார். எந்த மொழியில் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடாமல், அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் சித்தாந்த் நந்தன் சாஹோ என்பதே படத்தின் தலைப்பிற்கான காரணம் என முடிவுக்கு வந்துவிடலாம். இந்திய அரசாங்கத்தின் கண்களிலேயே விரலை விட்டு ஆட்டுக்கூடிய ராய் எனும் மிகப் பெரும் தொழிலதிபர் கொல்லப்படுகிறார். அவரை யார் கொன்றார்கள், ராய் வகித்த பதவிக்கு எவரெல்லாம் ஆசைப்படுகிறார்கள், ராயிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் என்னானது என்பதுதான் படத்தின் கதை. கே.ஜி.எஃப், லூசிஃபர் போன்ற படங்கள் தமிழ் மார்க்கெட் மீது குறி வைத்து மேக்கிங்கில் மெனக்கெட, 'பாகுபலி பிரபாஸ் நடித்த 350 கோடி ரூபாய் பட்ஜெட்டுடைய படம்' என்றால் மட்டும் போதாதா என்ற மெத்தனத்துடன் களமிறங்கியுள்ளார் இயக்குநர் சுஜீத். படத்தின் தொடக்கம் ஓர் எதிர்பார்ப்பைத் தூண்ட...