
ரிவால்வர் ரீட்டா – ஒரு டார்க் காமெடி படம்
பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், தி ரூட் நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இயக்குநர் JK. சந்துரு இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை பாத்திரத்தில் நாயகியாக நடித்துள்ள “ரிவால்வர் ரீட்டா” திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில் நடிகரும், ரேடியோ ஜாக்கியுமான பிளேடு சங்கர், “இது என் நண்பன் படம். கீர்த்தி மேடம் என் நெருங்கிய தோழி. இப்படத்தில் எல்லோருமே தெரிந்தவர்கள் தான். கோவிடின் போது சந்துரு உடன் பேசும்போது, ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் செய் என்று ஆரம்பித்தது தான் இந்தப்படம். தமிழ்படம், ரோமியோ ஜூலியட், மாநாடு, கோட், என பல படங்களில் அவர் எழுத்து இருக்கிறது, அதைப் பற்றிச் சொல்லிக் கொள்ளவே மாட்டார். அத்தனை தன்னடக்கம். அவர் நிறைய யோசிப்பார். நாம் என்ன ச...

