32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

ரமேஷ் திலக்

11 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன
லவ் மேரேஜ் விமர்சனம் | Love Marriage review இது புதிது முக்கியச் செய்தி
28/06/2025 Dinesh R 2 நிமிட வாசிப்பு

லவ் மேரேஜ் விமர்சனம் | Love Marriage review

உசிலம்பட்டியைச் சேர்ந்த முப்பத்து மூன்று வயதான ராமச்சந்திரனுக்குக் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த அம்பிகாவுடன் நிச்சயதார்த்தம் நிகழ்கிறது. ராமின் ராசிக்குக் கல்யாணமே ஆகாது என உறவினர்களும் ஊரார்களும் அவர் காதுபடக் கிண்டல் செய்தவண்ணம் இருக்க, அம்பிகாவுடனான திருமணத்திற்காக மிகவும் மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புடனும் காத்திருக்கிறார் ராம். அவரது ராசியோ, விதியோ, இயற்கையோ, இயக்குநரின் திரைக்கதையோ ஏதோ ஒன்று விளையாட, குடும்பத்துடன் கோபிச்செட்டிப்பாளையத்திலேயே லாக்டவுனில் சிக்கிக் கொள்வதோடு கல்யாணமும் நின்று விடுகிறது. 90’ஸ் கிட்டான ராமின் வேதனை ஒரு முடிவுக்கு வந்ததா இல்லையா […]

முழுமையாகப் படிக்க
செய்திகள் வரிசை (பக்கம் 1)
டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம் | Tourist Family review இது புதிது

டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம் | Tourist Family review

விலைவாசி உயர்வையும், கடன் சுமையையும் சமாளிக்க முடியாமல், வல்வெட்டித்துறையில் இருந்து தமிழ்நாட்டிற்குக் கள்ளத்தோணியில் தன் குடும்பத்தை அழைத்து வருகிறார் தர்மதாஸ். ராமேஸ்வரத்தில் நிகழும் ஒரு வெடிகுண்டு விபத்தில் தொடர்புடையவர்களாகத் தர்மதாஸின் குடும்பத்தினரைச் சந்தேகப்படுகின்றனர் காவலர்கள். அந்தச் சிக்கலில் இருந்து தர்மதாஸின் குடும்பத்தினர் மீண்டார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. தர்மதாஸின் இளைய மகன் முல்லியாகக் கமலேஷ் ஜெகன் நடித்துள்ளார். இவர், ராட்சசி படத்தில், ஜோதிகாவை வெட்கத்துடன் காதலிக்கும் கதிர் எனும் பள்ளிச் சிறுவனாக நடித்திருப்பார். இப்படத்தின் கலகலப்பிற்குப் […]

30/04/2025 Dinesh R
லெக் பீஸ் விமர்சனம் | Leg Piece review சினிமா

லெக் பீஸ் விமர்சனம் | Leg Piece review

இரண்டாயிரம் ரூபாய் பணத்தாள் ஒன்று கீழே கிடக்கிறது. அதை நான்கு பேர் பார்த்துவிடுகிறார்கள். தங்களுக்குள் சண்டை வேண்டாமென சரிசமமாகப் பகிர்ந்து குடிக்கலாம் என பாருக்குப் போகிறார்கள். சைட் டிஷாக லெக் பீஸ் வருகிறது. ‘கண்ட இடத்தில் மண்ணைக் கிளறி புழு பூச்சிகளை உண்ணும் கோழியின் லெக் பீஸைச் சாப்பிட்டால் வீண் பிரச்சனையைச் சந்திக்க நேரிடும் என்பது என் ஐதீகம்’ என்கிறார் திடீர் திருப்பதி. மிமிக்ரி கோபி, குயில் குமார், பேய் முருகேசன் ஆகிய மூவரும் லெக் பீஸ் […]

08/03/2025 Dinesh R
சினிமாவில் சாதிக்கத் துடிப்பவர்களுக்கான ப்ளாட்பார்ம் “ஸ்டார்டா” திரைச் செய்தி

சினிமாவில் சாதிக்கத் துடிப்பவர்களுக்கான ப்ளாட்பார்ம் “ஸ்டார்டா”

தமிழ் திரையுலகின் எல்லை விரிவடைந்துக் கொண்டேச் செல்கிறது. தற்போது தமிழ் திரைப்படங்களுக்கு உலகளவிலான அங்கீகாரமும், வணிகமும் இருக்கிறது. தமிழில் அறிமுகமாகும் இளம் படைப்பாளிகளும்.. வித்தியாசமான ஜானரில் தங்களுடைய படைப்புகளை உருவாக்கி கவனம் பெறத் தொடங்கியிருக்கிறார்கள். ஏராளமான புதிய கலைஞர்களும் தங்களுடைய திறமைகளை சமூக ஊடகங்களிலும், சமூக வலைத்தளப்பக்கங்களிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இலக்கும் திரைத்துறையில் நுழைந்து நட்சத்திரமாக ஜொலிக்கவேண்டும் என்பதாகவேயிருக்கிறது. ஆனால் அதற்கான சரியான அணுகுமுறை.. அவர்களுக்கு தெரிவதில்லை. திரைத்துறையில் அறிமுகமாகி தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை […]

09/02/2024 Inbaaraja
”கோடி கோடியாக கொடுத்தாலும் நடிக்கமாட்டேன்” – ஜீ.வி.பிரகாஷ் சினிமா

”கோடி கோடியாக கொடுத்தாலும் நடிக்கமாட்டேன்” – ஜீ.வி.பிரகாஷ்

படைப்பாளிகளுக்கும், கலைஞர்களுக்கும் இடையே வாய்ப்பிற்கான பாலத்தை உருவாக்கும் எண்ணத்தில் ‘ஸ்டார்டா’ எனும் பிளாட்ஃபார்ம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிளாட்ஃபார்மின் பிராண்ட் அம்பாசிடராக ஜீ. வி. பிரகாஷ் குமார் பொறுப்பேற்றிருக்கிறார். இந்த ‘ஸ்டார்டா’ பிளாட்ஃபார்ம் அறிமுக விழா சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது பாடகர் -இசையமைப்பாளர்- நடிகர்- தயாரிப்பாளர் என பன்முகத்திறமையுள்ள ஜீ. வி. பிரகாஷ்குமார், பாடகர்- பாடலாசிரியர்- நடிகர்- இயக்குநர் அருண்ராஜா காமராஜ், நடிகர் ரமேஷ் திலக், நடிகை நிவேதிதா சதீஷ், நடிகரும், தொகுப்பாளருமான அபிஷேக் […]

09/02/2024 Inbaaraja
குட் நைட் விமர்சனம் இது புதிது

குட் நைட் விமர்சனம்

நாம் அன்றாடம் வாழ்வில் கடக்கும் தருணங்களை சிறந்த கலைப்படைப்பாக மாற்றும் சினிமாக்கள் மலையாளத்தில் தான் அடிக்கடி வரும் என்ற பிம்பத்தைத் தமிழ் சினிமா நொறுக்கத் துவங்கியுள்ளது. அதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது குட்நைட் படம். படத்தின் கதைப்படி ஹீரோ மணிகண்டனுக்கு குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது. அவரை அறியாமல் அவர் விடும் குறட்டைச் சத்தம் தன் வீட்டையும் தாண்டிக் கேட்கும் அளவிற்கு வலிமையுடையது. அந்தக் குறட்டைச் சத்தத்தால் அவரது அக/புற வாழ்வில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்தான் படத்தின் திரைக்கதை. […]

11/05/2023 Dinesh R
வெல்வெட் நகரம் விமர்சனம் சினிமா

வெல்வெட் நகரம் விமர்சனம்

கொடைக்கானல் மலையில் ஏற்பட்ட தீ விபத்து இயற்கையானதல்ல எனக் கோரும் நடிகை கெளரி கொல்லப்படுகிறாள். அத்வைதா எனும் நிறுவனம், மலையில் செய்த சதியை நிரூபிக்கும் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகப் பத்திரிகையாளர் உஷாவிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கொல்லப்படுகிறார் கெளரி. ஏன் யாரால் கெளரி கொல்லப்படுகிறார் என்பதும், உஷா கெளரியின் கொலைக்கும், மலைக்கிராம மக்களுக்கு நிகழ்ந்த கொடுமையையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தாரா என்பதும்தான் படத்தின் கதை. படத்தின் கதை 48 மணி நேரத்திற்குள் நடப்பதாக அமைந்துள்ளது. முதல் நாள் இரவு […]

05/03/2020 Dinesh R
டிக்: டிக்: டிக் விமர்சனம் சினிமா

டிக்: டிக்: டிக் விமர்சனம்

வங்காள விரிகுடாவில் விழவிருக்கும் விண்கல்லைப் பூமிக்கு வெளியேவே அணு குண்டை ஏவிப் பிளக்கவேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு, ஆந்திரம், இலங்கை ஆகிய பகுதிகளில் சுனாமி ஏற்பட்டு, சுமார் 4 கோடி மக்கள் அழிந்துவிடுவர். இந்தியத் தற்காப்புப் படை, எப்படி நான்கு கோடி மக்களைக் காப்பாற்றுகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. இந்தியாவின் முதல் ஸ்பேஸ் மூவி என்ற வகையில் அசத்தியுள்ளனர் என்றே சொல்லவேண்டும். கன்னி முயற்சியில், நடை தளருவது இயற்கை எனினும் விழாமல் இலக்கை அடைவது சாதனையே! அந்தச் சாதனையை […]

22/06/2018 Dinesh R
ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் விமர்சனம் சினிமா

ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் விமர்சனம்

ஆந்திராவின் யமசிங்கபுரத்தில் யமதர்மராஜாவைக் குலதெய்வமாக வணங்கித் திருட்டுத் தொழிலைச் செய்யும் திருடர் குலத்தின் தலைவர் விஜய் சேதுபதி. பாண்டிச்சேரியில் ஒரு வீட்டில் திருடும் பொழுது, சுவரில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தில் நாயகியைப் பார்க்கிறார். சென்னையில் படிக்கும் நாயகியை, நண்பர்களின் உதவியுடன் கல்லூரியிலிருந்து யமசிங்கபுரத்துக்கு கடத்திக் கொண்டு செல்கிறார். கடத்தப்படும் நாயகியை மீட்க கெளதம் கார்த்திக் தன் நண்பன் டேனியலுடன் இணைந்து யமசிங்கபுரத்துக்கு இருவரணிப் படையாகச் செல்கிறார். விஜய் சேதுபதியின் யதார்த்த இயல்புடன் கலந்த நடிப்பு எப்போதும் போல நம்மைக் கவர்கிறது.  […]

02/02/2018 Dinesh R
12-12-1950 விமர்சனம் சினிமா

12-12-1950 விமர்சனம்

ரஜினி பிறந்த நாள் தான் படத்தின் தலைப்பு. தொண்ணூறுகளில் நாயகனாக நடித்த செல்வா தான் படத்தின் இயக்குநர் செல்வா. 1998இல் கோல்மால் எனும் படத்தை இயக்கிய பின், 19 வருடங்கள் கழித்து இரண்டாவது படத்தை இயக்கியுள்ளார். தன் பெயரையும் கபாலி செல்வா என மாற்றிக் கொண்டுள்ளார். அந்தளவிற்கு செல்வா ஒரு தீவிர ரஜினி ரசிகர். ரஜினி படத்துப் போஸ்டரை ஒருவன் கிழித்து விட, அதைத் தட்டிக் கேட்கச் செல்லும் ரஜினி ரசிகரான குங்ஃபூ மாஸ்டர் எதிர்பாராத விதமாக […]

08/12/2017 Dinesh R
பிச்சுவாகத்தி விமர்சனம் சினிமா

பிச்சுவாகத்தி விமர்சனம்

இனிகோ பிரபாகர், யோகி பாபு, ரமேஷ் திலக் ஆகிய மூவரும் நண்பர்கள். ஓர் ஆட்டினைத் திருடி போலீஸில் மாட்டிக் கொண்டு, கும்பகோணம் காவல் நிலையத்தில் ஒரு மாதம் கையெழுத்து போடவேண்டும் என நீதி மன்றத்தில் தீர்ப்பாகிறது. அந்தக் காவல் நிலையத்தில் இருக்கும் போலீஸ் அதிகாரி, மூவரிடமும் தலா பத்தாயிரம் கேட்கிறார். கையில் பணமில்லாச் சூழலில், அவர்களின் நிலை என்னாகிறது என்பது தான் படத்தின் கதை. படத்தில் ஒரு கிளைக்கதையும் உண்டு. இரண்டாம் நாயகனான செங்குட்டுவனுக்கு அனிஷாவைப் பார்த்த […]

23/09/2017 Dinesh R