Shadow

Tag: ரெட்ரோ திரைப்படம்

ரெட்ரோ | படக்குழுவிற்கு வைர மோதிரம் பரிசளிப்பு

ரெட்ரோ | படக்குழுவிற்கு வைர மோதிரம் பரிசளிப்பு

சினிமா, திரைச் செய்தி
2டி என்டர்டெய்ன்மென்ட், ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி முதல் வார இறுதியில் உலகம் முழுவதிலும் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, நூறு கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்திருக்கிறது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிப்பதற்காக படக் குழுவினர் பிரத்தியேக நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திரையுலகினரும், படக்குழுவினரும், ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 'ரெட்ரோ' படத்தைத் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் விநியோகம் செய்த சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளரான சக்தி வேலன், படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், நாயகனான சூர்யாவிற்கும் வைர மோதிரங்கள...