Shadow

Tag: வயலின் மேதை சந்திரசேகரன்

வயலின் ‘ஞான’ சேகரன் 80

வயலின் ‘ஞான’ சேகரன் 80

சமூகம்
1982இல், தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது வாங்கிய, சங்கீத கலாநிதியான வயலின் வித்வான் M.சந்திரசேகரனின் 80வது பிறந்தநாளை அவரது ரசிகர்களும் குடும்பமும், கடந்த ஞாயிறு ஜூலை 8 அன்று, சென்னை மியூசிக் அகாதெமியில் விழாவாகக் கொண்டாடினர்.70 வருடமாக இசைத்துக் கொண்டிருக்கும் சந்திரசேகரன், தனது முதல் கச்சேரியை மார்ச் 5, 1949 இல் அரங்கேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இசை மேதைமையை வியந்தோதி, பத்ம விபூஷன் டாக்டர் M. பாலமுரளிகிருஷ்ணா, சந்திரசேகரரை, ‘ஞானசேகரன்’ என்றே அழைப்பார். கல்கத்தாவில் பிறந்த சந்திரசேகரன், மஞ்சள் காமாலையின் தாக்கத்தால், தன் இரண்டாவது வயதிலேயே தன் பார்வைத் திறனை இழந்து விடுகிறார். ஏழு வயதில் தந்தையையும் இழக்க, அவரைச் சென்னை அழைத்துக் கொண்டு வந்துவிடுகிறார் அவரது தாயார் ஸ்ரீமதி சாருபாலா மோகன். மகனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, தன் மகனுக்கு குருவாக இருந்து வயலின் வாசிக்கச...