Shadow

Tag: வர்ஷா பொல்லம்மா

கல்லூரி மாணவராய் ஜி.வி.பிரகாஷ் கலக்கும் காதல் – ஆக்‌ஷன் படம்

கல்லூரி மாணவராய் ஜி.வி.பிரகாஷ் கலக்கும் காதல் – ஆக்‌ஷன் படம்

சினிமா, திரைத் துளி
தமிழ் சினிமாவில் தரமான படங்களைத் தயாரித்து வெளியிடுவதில் முனைப்போடு செயல்பட்டு வரும் நிறுவனம் கே ப்ரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் சார்பில் எஸ். என். ராஜராஜன் தயாரிக்கும் படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கிறார். இந்தப் புதிய படத்தின் மூலம் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குநராக அறிமுகமாகிறார். ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். இவர் சீமத்துரை, '96, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் வாகை சந்திரசேகர் மற்றும் அறிமுக நடிகர் குணா நடிக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இவர் அண்ணனுக்கு ஜே, வெள்ளை யானை படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர். படத்தொகுப்பை எஸ். இளையராஜா கவனிக்கிறார். இப்படத்தில் ஜி.விபிரகாஷ் கல்லூரி ...
சீமத்துரை விமர்சனம்

சீமத்துரை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சீமை - அரசர் ஆண்ட நிலப்பகுதி அல்லது வெளிநாடு என இரு வேறு பொருளைக் கொள்ளலாம்; துரை - இந்தியாவில் வசித்த ஐரோப்பியர்களைக் குறிக்கும் சொல். ஆக, சீமைத்துரை என்றால் அதிகாரத் தோரணை மிகுந்த நடத்தையை உடையவர் எனப் பொருள் கொள்ளலாம். நாயகன் அப்படிப்பட்ட குணவார்ப்பு உடையவரெல்லாம் இல்லை. ஆனால், அவரது அம்மாவிற்கு தன் மகன் சீமத்துரை என்ற நினைப்பு. ஊரில் ஏதாவது உரண்டையை இழுத்துவிடும் கல்லூரி மாணவன் மருது. அவனுக்குப் பூரணியைக் கண்டதுமே முதல் பார்வையில் காதல் வருகிறது. அந்தக் காதல் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. '96 படத்தில் விஜய் சேதுபதியின் மாணவியாக வரும் வர்ஷா பொல்லம்மா தான் படத்தின் நாயகி. அப்பாவின் அன்புக்கும், மருதுவின் காதலுக்கும் இடையில் தவிக்கும், பூரணி எனும் பாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார். அவரது பெரிய கண்களுக்கு மட்டும் க்ளோஸ்-அப் வைத்துள்ளார் திருஞானசம்பந்தம். கண்களால் தன் உணர்வுகளைப் ...