32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

கல்லூரி மாணவராய் ஜி.வி.பிரகாஷ் கலக்கும் காதல் – ஆக்‌ஷன் படம்

Dinesh R சேலம் Published: 13/09/2019 1 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

G.V.Praksah-in-K-Productions

தமிழ் சினிமாவில் தரமான படங்களைத் தயாரித்து வெளியிடுவதில் முனைப்போடு செயல்பட்டு வரும் நிறுவனம் கே ப்ரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் சார்பில் எஸ். என். ராஜராஜன் தயாரிக்கும் படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்தப் புதிய படத்தின் மூலம் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குநராக அறிமுகமாகிறார். ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். இவர் சீமத்துரை, ’96, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் வாகை சந்திரசேகர் மற்றும் அறிமுக நடிகர் குணா நடிக்கிறார்கள்.

ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இவர் அண்ணனுக்கு ஜே, வெள்ளை யானை படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர். படத்தொகுப்பை எஸ். இளையராஜா கவனிக்கிறார்.

இப்படத்தில் ஜி.விபிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார். ஒரு மாணவனுக்கு, கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்ஷன் கலந்து திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். காதல், எமோஷனல், ஆக்ஷன் என முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாகத் தயாராக இருக்கிறது. இந்தப் படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா செப்டம்பர் 12 அன்று ஏவி.எம் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர்கள் வெற்றிமாறன், சமுத்திரகனி, சுப்ரமணிய சிவா, சரவணன், இளன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.