Shadow

Tag: வால்டர் திரைப்படம்

வால்டர் – ஷிரின் காஞ்வாலா

வால்டர் – ஷிரின் காஞ்வாலா

சினிமா, திரைத் துளி
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நாயகி ஷிரின் காஞ்வாலா. தற்போது சிபிராஜ்க்கு ஜோடியாக ‘வால்டர்’ படத்தில் நடித்துள்ளார். படத்தைப் பற்றிப் பேசிய ஷிரின், “திகில் மற்றும் திருப்பங்கள் நிறைந்ததாக திரைக்கதை இருந்தது. மேலும் படத்தின் கதையில் வரும் சம்பவங்கள் உண்மையில் நடந்தது என்பது அதிர்ச்சி தருவதாக இருந்தது. எதிர்பாராதவிதமாக நான் சமூக நோக்குடன் கூடிய அழுத்தமான படங்களில் தொடர்ந்து பணிபுரிகிறேன். அது மனதிற்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறது. படத்தின் மையம் மிக அழுத்தமான விடயத்தைப் பதற்றம் தரும் வகையில் கூறுவதாக இருந்தாலும், இயக்குநர் U.அன்பு படத்தில் ரொமான்ஸும் சரியான அளவில் வருவது போல திரைக்கதை அமைத்துள்ளார். சாதாரணமாக இந்த வகை திரைப்படங்களில் நாயகிக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது. ஆனால் இப்படத்தில் இயக்குநர் எனக்கு மிகச்சிறந்த கதாபாத்திரம் தந்துள்ளார். சிபிராஜ் ஒரு...
சென்னையில் தொடரும் வால்டர்

சென்னையில் தொடரும் வால்டர்

சினிமா, திரைத் துளி
சிபிராஜ் நடிப்பில் உருவாகும் 'வால்டர்' திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஷிரின் காஞ்வாலா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். தற்போது இவர்கள் இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பிற்காகச் சென்னையில் கலந்து கொள்ளவுள்ளனர். 11:11 நிறுவனத்தின் சார்பாக இப்படத்தை டாக்டர் பிரபு திலக்கும், சுருதி திலக்கும் தயாரித்து வருகிறார். "இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கும்பகோணத்தில் வெற்றிகரமாக நடந்துள்ளது. திட்டமிட்டபடி இப்படத்தின் வேலைகள் சரியாகச் சென்று கொண்டிருப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் சென்னையில் துவங்கி முழுவதையும் அங்கேயே முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்தின் அடுத்தக் கட்டப் படப்பிடிப்ப...
சிபிராஜ் வசமானது ‘வால்டர்’

சிபிராஜ் வசமானது ‘வால்டர்’

சினிமா, திரைத் துளி
சிபிராஜின் தந்தை சத்யராஜ் அவரது திரை வாழ்வில் மறக்க முடியாத படமான ‘வால்டர் வெற்றிவேல்’ படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் சிபிராஜின் படத்துக்கு, வால்டர் என்ற தலைப்பு கிடைக்க பிரச்சனை நிலவி வந்தது. தற்போது அத்தகைய பிரச்சினைகள் நீங்கி, சிபிராஜின் படத்திற்கு 'வால்டர்' என்ற தலைப்பு கிடைத்திருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது. தலைப்பின் உரிமையை மாற்றிக் கொடுக்க முழு மனதுடன் சம்மதித்து, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்குக் கடிதம் அளித்துள்ளார் மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சிங்காரவேலன்.  இதைப் பற்றி தயாரிப்பாளர் பிரபு திலக், “சிபிராஜ் அவர்களின் தந்தை சத்யராஜ் சாரின் பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் முக்கியத்துவம் காரணமாக இந்தப் படத்துக்கு 'வால்டர்' என்று பெயரிட விரும்பினோம். துரதிர்ஷ்டவசமாக, தலைப்பு தொடர்பான சில சிக்கல்களை நாங்கள்...