32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சிபிராஜ் வசமானது ‘வால்டர்’

Dinesh R சேலம் Published: 19/06/2019 2 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

Walter-Sibiraj

சிபிராஜின் தந்தை சத்யராஜ் அவரது திரை வாழ்வில் மறக்க முடியாத படமான ‘வால்டர் வெற்றிவேல்’ படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் சிபிராஜின் படத்துக்கு, வால்டர் என்ற தலைப்பு கிடைக்க பிரச்சனை நிலவி வந்தது. தற்போது அத்தகைய பிரச்சினைகள் நீங்கி, சிபிராஜின் படத்திற்கு ‘வால்டர்’ என்ற தலைப்பு கிடைத்திருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது. தலைப்பின் உரிமையை மாற்றிக் கொடுக்க முழு மனதுடன் சம்மதித்து, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்குக் கடிதம் அளித்துள்ளார் மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சிங்காரவேலன். 

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இதைப் பற்றி தயாரிப்பாளர் பிரபு திலக், “சிபிராஜ் அவர்களின் தந்தை சத்யராஜ் சாரின் பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் முக்கியத்துவம் காரணமாக இந்தப் படத்துக்கு ‘வால்டர்’ என்று பெயரிட விரும்பினோம். துரதிர்ஷ்டவசமாக, தலைப்பு தொடர்பான சில சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இறுதியில் எல்லாம் முடிந்து தலைப்பு எங்கள் வசமானது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தற்போது, ‘வால்டர்’ படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் கோவில் நகரமான கும்பகோணத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தை சுவாரசியமான கூறுகள் மூலம் தொகுத்துள்ளார் இயக்குநர் அன்பு.

ஸ்கிரிப்ட்டைக் கேட்கும்போதே ஒரு பார்வையாளனாக என்னை ஆச்சரியப்படுத்தியது. கும்பகோணத்தில் ஒரு க்ரைம் த்ரில்லரைப் படமாக்குவது குறித்த அவரது அடிப்படை யோசனையே எனது கவனத்தை ஈர்த்தது. ஏனெனில் கும்பகோணம் என்றாலே பெரும்பாலும் குடும்ப பொழுதுபோக்கு படங்கள் மற்றும் காதல் படங்களைத்தான் படமாக்குவார்கள். இந்தப் படத்தின் இறுதி வடிவத்தைத் திரையில் பார்க்கும் தினத்தை எண்ணி உற்சாகமாகக் காத்திருக்கிறேன். குறிப்பாக சமுத்திரகனி சார் போன்ற மிகச்சிறந்த நடிகர்கள் இந்தப் படத்தில் இருப்பதால் அந்த ஆவல் மேலும் அதிகமாகி இருக்கிறது” என்றார்.

11:11 ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் பிரபு திலக் மற்றும் ஸ்ருதி திலக் இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள். இப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்து நாயகியான ஷிரின் காஞ்வாலா நடிக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் ஒருவரை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திடுக்கிடும் திருப்பங்களுடன் அமைந்த ஒரு அற்புதமான கதை என்பதைத் தவிர, ராட்சசன் புகழ் விக்கி வடிவமைத்த அதிரடி காட்சிகள் இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக இருக்கும் என்று உறுதிப்படுத்துகிறார் தயாரிப்பாளர் பிரபு திலக்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.