Shadow

Tag: வெங்கட் பிரபு

பிரேம்ஜியின் இசையில் ‘பார்ட்டி’ துவங்கியது

பிரேம்ஜியின் இசையில் ‘பார்ட்டி’ துவங்கியது

சினிமா, திரைத் துளி
அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சரோஜா படத்துக்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தயாரிக்கும் படம் பார்ட்டி. ஜூலை 12 அன்று, இந்தப் படத்தின் பூஜை நடந்தது. சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளம் பார்ட்டியில் பங்கேற்கிறது. முதல் முறையாக பிரேம்ஜி, வெங்கட் பிரபுவின் படத்துக்கு இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். பிஜி தீவுகளில் படமாக்கப்பட இருக்கும் ‘பார்ட்டி’ படத்தின் நட்சத்திர அறிமுகம், மிகப் பெரிய அளவில் வெங்கட் பிரபுவிற்கே உரிய பாணியில் நடந்தது. ‘பார்ட்டி’ மீதான எதிர்பார்பை உருவாக்கியுள்ளது வெங்கட் பிரபு & கோ....
பில்லா பாண்டி – ஃபர்ஸ்ட் லுக்

பில்லா பாண்டி – ஃபர்ஸ்ட் லுக்

Movie Posters, கேலரி, சினிமா
தாரை தப்பட்டை படத்து வில்லனான R.K.சுரேஷ் நாயகனாக நடிக்கும் பில்லா பாண்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டார்.
மேஜர் கெளதமின் டைமிங் தலைப்பு

மேஜர் கெளதமின் டைமிங் தலைப்பு

சினிமா, திரைச் செய்தி
ப்ரேக் டான்ஸராக இருந்து நடிகராக மாறிய ‘மேஜர்’ கெளதம் தற்போது இயக்குநர் அவதாரம் பூண்டுள்ளார். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இந்நேரத்தில் ‘மேஜர்’ கெளதமும் அவரது குழுவும் மட்டும் மகிழ்ச்சியாக உள்ளனர். காலத்தின் அவசியம் உணர்ந்த வைக்கப்பட்டது போல், “கண்ல காச காட்டப்பா” என அவர்களின் படத் தலைப்பு அமைந்துவிட்டதே அதற்குக் காரணம். தலைப்பு மட்டுமன்று, படத்தின் கருவும் கறுப்புப் பணத்தை மையப்படுத்தியே! படத்தைப் பார்த்து விட்ட இயக்குநர் வெங்கட் பிரபு, “இரண்டரை மணி நேரம் ரசிகர்கள் கலகலப்பாக இருக்கப் போவது உறுதி” என்கிறார். S.G.சேகர் என்பவர் கதையை, இயக்குநர் கெளதம் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார். ‘ஹெலிகேம் (Helicam)’ ஷாட்ஸ்கள் படத்தில் பிரமாதமாக உள்ளதென ஒளிப்பதிவாளர் அரவிந்தைப் பாராட்டினார் வெங்கட்பிரபு. படத்தின் நாயகனான அரவிந்த் ஆகாஷும், “மலேஷியாவில் ஷ...
சீரியஸான ஹாரர் படம்

சீரியஸான ஹாரர் படம்

சினிமா, திரைத் துளி
“இலங்கையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து, சிங்கப்பூரில் வேலை செய்து, இப்போ சென்னையில் படமெடுத்துள்ளார் ஸ்ரீநாத். இப்ப வர படமெல்லாம் காமெடி பேய்ப்படமாகத்தான் இருக்கு. ஆனா ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ சீரியஸான ஹாரர் படம். இவர்ட்ட இருந்து இப்படியொரு படம் எதிர்பார்க்கவே இல்லை” என்றார் பிரபு வெங்கட், மேலும், “நேத்து நானும், ரம்யாவும், என் பொண்ணு ஷிவானியும் படம் பார்த்தோம். காதை அடிக்கடி பயத்தில் மூடிக்கிட்டாங்க. ஹாரர் படத்துக்கு முக்கியமானது இசை. சிவசரவணன் கலக்கியுள்ளார்” என்றார் வெங்கட் பிரபு. படத்தொகுப்பாளர் ஹரிஹரன், இசையமைப்பாளர் சிவரசவணன், இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம் என பலருக்கும் இதுவே முதல் படம். ஷண்முகசுந்தரம் தயாரித்துள்ள இப்படத்தை, ஆரா பிலிம்ஸ் மகேஷ் வெளியிடுகிறார். தொடர்ந்து நல்ல படங்களை வெளியிடவும் தயாராகயிருப்பதாக அறிவித்தார். விநாயக சதுர்த்திக்கு படம் வெளிவர உள்ளதென்ற மகிழ்ச்சி...
மங்காத்தா விமர்சனம்

மங்காத்தா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மங்காத்தா - வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அஜீத்தின் 50வது படம் என்ற ஒன்றே படத்தின் எதிர்பார்ப்பை தாறுமாறாக எகிற செய்தது. அந்த எதிர்ப்பார்ப்பை வீண் செய்யாமல் படு அமர்க்களமாய் திரையரங்கைக் கலக்கி வருகிறது மங்காத்தா.தற்காலிக வேலை நீக்கத்தில் உள்ள காவல் துறை அதிகாரி விநாயக், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆறுமுக செட்டியாரிடமிருந்து பெரும் தொகையை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார். அதே திட்டத்துடன் இருக்கும் நான்கு இளைஞர்களுடன் கூட்டு சேர்ந்து, ஆறுமுக செட்டியாரிடமிருந்து கொள்ளையடிக்கிறார். கொள்ளையடித்த பணம் கொள்ளையர்களைச் சுற்றலில் விடுகிறது. இறுதியாக பணம் யார் கையில் சேர்ந்தது என்பதுடன் படம் நிறைவுறுகிறது.விநாயக் மகாதேவனாக அஜித். தமிழ்த் திரையுலகம் கண்டெடுத்த நாயகனுக்குரிய இலக்கணத்தைத் தூக்கிப் போட்டு மிதித்து துவம்சம் பண்ணி விட்டார் தல. அசல் நாயகன் என அஜீத் ரசிகர்கள் மார் தட்டிக் க...