
கிருஷ்ணர் ஆன்த்தம் – தமிழர் திருநாள் இசைப் பரிசு
தமிழ்த் திரையிசை ரசிகர்களிடையே ‘மாயோன்’ படத்தில் இடம்பெற்ற ‘மாயோனே..’ எனத் தொடங்கும் முதல் பாடலுக்குப் பெரும் வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது. இதனால் உற்சாகமடைந்த படக்குழுவினர், இந்தப் படத்தில் இடம்பெறும் 'சிங்கார மதன மோகனா..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடலை வெளியிட்டிருக்கிறார்கள்.
டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதித் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மாயோன்’. இதில் சிபி சத்யராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் என். கிஷோர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளியான இப்படத்தின் சிங்கிள் ட்ராக் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது இந்தப் படத்தில் இசைஞானி இளையராஜா எழுதி, இசையமைத...


